திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

தகாத உறவில் இருந்த இயக்குனரின் மனைவி.. எல்லாத்திற்கும் அந்த ஒரு பழக்கம் தான் காரணம்

Actress Gossip News: தன்னுடைய வித்தியாசமான கதைகளின் மூலம் ரசிகர்களை ஈர்த்த இயக்குனர். எந்த அளவுக்கு நல்ல படங்களை கொடுத்திருக்கிறாரோ அதே அளவுக்கு பஞ்சாயத்துக்கும் பேர் போனவர். இந்த இயக்குனரால் சினிமாவில் திருப்புமுனையை சந்தித்த நடிகர்கள் அதிகம். அந்த அளவுக்கு தரமான படங்களை கொடுத்திருக்கிறார்.

என்னதான் திறமை இருந்தாலும் இயக்குனருக்கு யாரிடமும் நட்பு பாராட்ட தெரியாது என்பதுதான் உண்மை. தன் உறவுக்கார பெண்ணை திருமணம் செய்த இயக்குனருக்கு கடந்த சில வருடங்களாகவே சினிமாவில் பெரிதாக வெற்றி என்பது இல்லாமலேயே போய்விட்டது. மேலும் குடிப்பழக்கமும் அதிகமாகி விட்டது. தெரிந்தவர்கள் மற்றும் நண்பர்கள் எவ்வளவு அறிவுரை சொல்லியும் திருந்துவதாக இல்லை.

ஒரு கட்டத்தில் குடும்பத்திற்காக திருந்திய இவர் சினிமாவில் அடுத்தடுத்து சறுக்கல்களை சந்தித்து பெரிய ஹீரோ ஒருத்தரின் படமும் கைநழுவி போனதால் மீண்டும் பழைய குருடி கதவைத் திறடி என்பது போல் போதை பழக்கத்தை ஆரம்பித்து இருக்கிறார். வீட்டையே பார் ஆக்கும் அளவுக்கு குடிப்பழக்கம் தன்னை மிஞ்சி போய்விட்டது.

இயக்குனர் இப்படியே போதையில் மிதந்து கொண்டிருக்க மனைவியோ நட்பு வட்டாரத்தில் ஒருவருடன் காதல் வளர்க்க ஆரம்பித்து விட்டார். இயக்குனருக்கு இந்த விஷயம் தெரிந்தும் வெளியில் சொல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருந்திருக்கிறார். உறவினர்களும் கண்டிக்கவே சரி இனி இந்த உறவை முறித்துக் கொள்ளலாம் என மனைவி முடிவெடுத்து திருந்தினாலும், இயக்குனரின் போதைப் பழக்கம் மறுபடியும் அவரை அந்த தவறான உறவுக்குள் தள்ளி விட்டது.

கணவன் போதையிலும், மனைவி காதலிலும் திளைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் தான் அந்தத் தவறான உறவின் மூலம் கர்ப்பமாகி இருக்கிறார். கருவை கலைத்து விட்டாலும் விஷயம் இயக்குனருக்கு தெரிந்து பெரிய பூதாகரமாக வெடித்திருக்கிறது. இனி இவருடன் வாழவே முடியாது என முடிவு செய்த இயக்குனர் விவாகரத்துக்கு ரெடியாகி இருக்கிறார்.

உறவினர்கள் கூடி பேசியும் இயக்குனரின் மனைவி காது கொடுத்து கேட்பதாக இல்லை. இதுதான் சமயம் என அவருடைய போதை பழக்கத்தின் மேல் பழி போட்டுவிட்டு டாட்டா காட்டிவிட்டு வெளியில் சென்று விட்டார். ஆனால் நெருப்பில்லாமல் புகையாது என்பது போல் விவாகரத்து அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே இயக்குனரின் மனைவியின் ஆசை காதலன் யார் என முதற்கொண்டு தகவல் வெளியாகி விட்டது.

Trending News