புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

கதிரை கழட்டிவிடும் குடும்பம்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் பிரச்சினையை கிளப்பி விட்ட விஷப்பூச்சி

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் அடுத்தடுத்து பிரச்சனை ஏற்படுவதால், வீட்டை மாற்ற வேண்டும் என கனவில் அம்மா சொன்னதைக் கேட்டதும் மூர்த்தி, பழைய வீட்டை விற்று விட்டு புதிய மனை வாங்கி, வீடு கட்டும் எண்ணத்திற்கு வந்திருக்கிறார். இதனால் குடும்பமே சேர்ந்து புதிதாக மனை வாங்க முடிவெடுத்தால் அதை கதிரும் வந்து பார்த்து ஓகே சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில், ஜீவா கதிரை அந்த மனைக்கு அழைத்துச் செல்கிறார். அந்த சமயம் இந்த சீரியலுக்கு வலுவாக இருக்கும் கதிர்-ஜீவா இடையேயான அண்ணன் தம்பி பாசப்பிணைப்பை அழகாக காட்டினர்.

Also Read : குரளி வித்தை பலிக்கல, இப்ப அடுத்த வித்தை காட்டும் கதிர்.. ரணகளமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ்

வீடு விற்க போகிறார்கள் என்பதை தெரிந்ததும் முல்லையின் அம்மா மற்றும் முல்லையின் அக்கா இருவரும் மூர்த்தியின் குடும்பத்தினரிடம், ‘யாரைக் கேட்டு விற்கிறீர்கள். நாலாபக்கமும் விலை கேட்டு விசாரித்து, எங்களுடைய ஆலோசனையின் பெயரில் வீட்டை விற்க வேண்டும்’ என பிரச்சனை ஏற்படும் அளவுக்கு கொளுத்தி போட்டனர். அதன்பிறகு இதைப்பற்றி முல்லையிடம் தெரிவித்தபோது, முல்லை அவர்களை சரமாரியாக திட்டுகிறார்.

‘எங்களுக்கு தெரியாமல் வீட்டை விற்கிறார்கள் என்று நான் வந்து மூலையில் உட்கார்ந்து அழுது புலம்பினேனா. எதற்காக அங்கு சென்ற தேவையில்லாததை எல்லாம் பேசினீர்கள்’ என்று தன்னுடைய அம்மா அக்கா இருவரையும் கண்டபடி முல்லை திட்டினார். இருப்பினும் முல்லை அம்மாவிற்கு என்ன ஆதங்கம் என்றால், அண்ணன் தம்பி சேர்ந்து எடுக்கும் முடிவில் கதிரை மட்டும் கலக்கி விட்டார்களே என்ற நல்ல எண்ணத்தில் இப்படி செய்தார். ஆனால் முல்லையின் அக்கா மல்லிக்கு அப்படி ஒரு நல்ல எண்ணம் துளி கூட இல்லை.

Also Read : மீண்டும் சீரியலில் நடிக்கப் வரும் ஆலியா.. இந்த வாட்டி விஜய் டிவிக்கு ஆப்பு

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் பிரச்சினை வருவதற்காகவே விஷப்பூச்சி போல் செயல்பட்டு அம்மாவை மூர்த்தி குடும்பத்தினரிடம் சண்டைபோட தூண்டிவிட்டார். இருப்பினும் நான்கு அண்ணன் தம்பிகளும் மனதார ஒற்றுமையுடனும் பாசத்துடனும் இருப்பதால், இவர்களுக்கிடையே தற்காலிகமாக பிரிவு ஏற்பட்டாலும் மனதார பிரியும் எண்ணத்தில் யாரும் இல்லை.

Also Read : பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகளா இது? வெறும் பனியனில் அலறவிட்ட வைரல் புகைப்படம்

Trending News