புதன்கிழமை, ஜனவரி 22, 2025

பொய் பித்தலாட்டம் பண்ணும் ரோகினியை நம்பும் மடசாம்பிராணி.. மீனாவின் காசை ஆட்டைய போட நினைக்கும் மாமி

Sirakadikkum Asai: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மீனா கஷ்டப்பட்டு செஞ்ச வேலைக்கு கைநிறைய பலன் கிடைக்கும் விதமாக 2 லட்சம் ரூபாய் பணம் கிடைத்துவிட்டது.

இந்த சந்தோஷத்தில் மீனா தோழிகளுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்துவிட்டு வீட்டிற்கு வருகிறார். பின்பு முத்து மற்றும் மீனா அண்ணாமலை இடம் பணத்தை கொடுத்து ஆசீர்வாதம் வாங்கிக் கொள்கிறார்கள்.

ஆசிர்வாதம் பண்ணிய அண்ணாமலை திருப்பி அந்த பணத்தை மீனாவிடம் கொடுத்து இது உன் உழைப்புக்கு கிடைத்த ஊதியம் பத்திரமாக வைத்துக் கொள் என்று சொல்லிவிடுகிறார். உடனே முத்துவும் சவாரி இருக்கு என்று போய்விடுகிறார்.

மீனாவின் காசை ஆட்டைய போட நினைக்கும் மாமி

இந்த நேரத்தில் விஜயா நம்மிடம் வந்து இந்த பணத்தை கொடுப்பார் என்று பேராசையில் சுத்தி சுத்தி வருகிறார். ஆனால் மீனா இது எதையுமே கண்டு கொள்ளவில்லை. அடுத்து விஜயா, ரோகினிடம் மறைமுகமாக பேசி எப்படியாவது பணத்தை வாங்கி விடலாம் என்று பிளான் பண்ணுகிறார்.

மாமியாருக்கு ஏற்ற மாதிரி ரோகிணியும் ஜால்ரா அடிக்கிறார். ஆனால் இதெல்லாம் ஒண்ணுமே இல்லை என்ற சொல்வதற்கு ஏற்ப மீனா எனக்கு வெளியில் கொஞ்சம் வேலை இருக்கிறது. நான் போயிட்டு வந்து விடுகிறேன் என்று சொல்லிக் கிளம்பி விடுகிறார்.

கடைசியில் மீனாவின் பணத்தை ஆட்டைய போட நினைத்த மாமியாருக்கு ஒன்னும் கிடைக்காமல் போய்விட்டது. அடுத்ததாக மீனா, முத்துவின் நண்பரை சந்தித்து அவருக்கு சர்ப்ரைஸ் ஆக கார் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார்.

ஆனால் அதற்கு முத்துவின் நண்பர் புது கார் வாங்க வேண்டும் என்றால் குறைந்தது 10 லட்ச ரூபாய் வேண்டும் என்று சொல்கிறார். இதற்கு இன்னொரு வழி இருக்குது செகண்ட் யூஸ் கார் வாங்கி கொடுக்கலாம் என்று மீனாவை அதற்கு ஏற்ற காரை பார்க்க வைத்து எல்லாத்தையும் பேசி விடுகிறார்.

ஆனாலும் இதற்கு கொஞ்சம் பணம் கம்மியாக இருப்பதால் வட்டிக்கு கடன் வாங்கி எப்படியாவது காரை வாங்கி கொடுக்க வேண்டும் என்று முடிவு பண்ணி விட்டார். அடுத்ததாக ரோகினியை பார்ப்பதற்காக பியூட்டி பார்லருக்கு மனோஜ் போகிறார்.

ஆனால் அங்கே போனதும் விஜயா பெயரில் பார்லர் இல்லை என்ற அதிர்ச்சியில் ரோகினிடம் என்ன எங்க அம்மா பெயரை காணும் என்று கேட்கிறார். இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத ரோகினி ஒவ்வொரு பொய்யா சொல்லி சமாளிக்கிறார்.

ஆனால் கடைசியில் ரோகினி என்ன பொய் பித்தலாட்டம் சொன்னாலும் அதை மடசாம்பிராணி மாதிரி மனோஜ் நம்பி விடுவார். இந்த மாதிரி ஒரு ஆளும், குடும்பமும் இருந்தால் ரோகினி என்ன பண்ணாலும் கடைசிவரை தெரியாமலேயே போய்விடும்.

Trending News