வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

கங்குவாவை காப்பாற்ற குடும்பமே போட்ட திட்டம்!. மீடியாவுக்கு வெளிச்சம் போட்டு காட்டிய பிரபலம்

Kanguva: சூர்யா நடித்த கங்குவா படத்தை பற்றி அவரை தவிர மற்ற எல்லோருமே வாயை திறந்து பேச ஆரம்பித்திருக்கிறார்கள். படம் ரிலீஸ் ஆகி இரண்டு நாட்களில் ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை முன் வைத்தது என்னவோ உண்மைதான்.

அதை தொடர்ந்து நடந்த விஷயங்கள் தான் தற்போது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. கங்குவா படம் ரிலீஸ் ஆகி இரண்டு மூன்று நாட்களில் நடிகை ஜோதிகா அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

கங்குவாவை காப்பாற்ற குடும்பமே போட்ட திட்டம்

அதில் அவர் உபயோகித்த சில வார்த்தைகள் கொஞ்சம் கூட நியாயம் இல்லாதது என்பதுதான் தற்போது விமர்சகர்கள் எடுத்து வைக்கும் கருத்து. சமீபத்தில் ஆர்.ஜே பாலாஜி கூட இது பற்றி பேசி இருக்கிறார். ஒரு பிஸ்கட்டை எப்போ நம்ம கடை தெருவுக்கு எடுத்துட்டு வந்து விற்க ஆரம்பிச்சிட்டோமோ அது உப்பா இருக்கு, நல்லா இல்ல என்று சொல்லத்தான் செய்வார்கள்.

அது மாதிரி தான் சினிமாவும் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் கங்குவா படத்தை பற்றி யாருமே தவறான விமர்சனத்தை கொடுக்கக் கூடாது, இனி தியேட்டர் வாசல்களில் யூடியூபர்கள் திரைவிமர்சனம் பற்றி ரசிகர்களிடையே கேட்கக்கூடாது என ஏகப்பட்ட உத்தரவுகள் கொடுக்கப்படுகின்றன.

இது குறித்து பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார். தியேட்டர் முன்பு யூடியூபர்கள் விமர்சனம் கேட்கக்கூடாது, வெளி மாநிலத்தில் படம் பார்த்துவிட்டு வந்து இங்கே விமர்சனம் பண்ண கூடாது என எல்லா விஷயங்களுக்கும் நீதிமன்றத்தில் தடை வாங்க வேண்டும் என எக்கச்சக்க கோரிக்கைகளுடன் தயாரிப்பாளர் சங்கத்தில் ஒரு மீட்டிங் நடைபெற்றிருக்கிறது.

அதில் கையெழுத்திட்டு இருப்பவர் எஸ் ஆர் பிரபு. இவர் சூர்யா நடித்த கங்குவா படத்தின் விநியோகஸ்தர் மட்டுமில்லாமல் சூரியாவின் நெருங்கிய உறவினர். மேலும் அதில் உறுப்பினராக இருக்கும் தனஞ்செயன் ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தில் தான் வேலை பார்க்கிறார்.

அந்த அறிக்கையில் இயக்குனர் பாரதிராஜா கையெழுத்து டிஜிட்டல் முறையில் போடப்பட்டிருக்கிறது. பாரதிராஜாவுக்கு உடல்நிலை சரியில்லை, அவருக்கு இதெல்லாம் என்ன விஷயம் என்று கூட தெரியுமா என்று தெரியவில்லை என செய்யாறு பாலு கேள்வி எழுப்பி இருக்கிறார்.

ஒரு படம் வெற்றி தோல்வி என்பது நடிகர்கள் சாதாரணமாக கடந்து போகும் விஷயமாக இருக்க வேண்டும். ஆனால் கங்குவா படம் பற்றி யாருமே விமர்சனம் செய்யக்கூடாது என பேசுவதெல்லாம் கொஞ்சம் அதிகபட்சம் தான்.

Trending News