வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ஷூட்டிங் ஸ்பாட்டில் ரகளை செய்த நடிகை, அடங்கிப் போன பாலு மகேந்திரா.. இது என்ன புது கதையா இருக்கு!

Director Balu Mahendra: இயக்குனர் பாலு மகேந்திரா எந்த அளவுக்கு தன்னுடைய எதார்த்தமான படங்களின் மூலம் சினிமா ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்தாரோ, அதே அளவுக்கு சர்ச்சைகளுக்கும் பேர் போனவர். இவர் மறைந்து பல வருடங்கள் ஆகியும் இவர் மீதான சர்ச்சைகள் இன்று வரை மீடியாவில் பேசும் பொருளாகவே இருக்கிறது. பல பிரபலங்கள் இவரை பற்றி தங்களுடைய பேட்டிகளில் பேசியிருக்கிறார்கள்.

பிரபலமான இயக்குனராக இருந்தாலும் சர்ச்சை நாயகனாக இவர் மாறியதற்கு மிக முக்கிய காரணம் இவருடைய காதல் வாழ்க்கை தான். திருமணமாகி அகிலா என்ற மனைவியும் இருக்கிறார். இருந்தபோதிலும் திருமணம் என்ற உறவை தாண்டி இவர் தன்னுடைய படங்களின் நடித்த நடிகைகளுடன் காதல் வயப்பட்டு இருக்கிறார். நடிகைகள் ஷோபா தொடங்கி மௌனிகா வரை இவருடைய காதல் வலையில் விழுந்தவர்கள் தான்.

Also Read:ஊருக்குத்தான் புருஷன், பொண்டாட்டி.. ஆளுக்கு ஒரு பக்கமாக பிச்சுகிட்டு திரியும் ஜோடி

பாலு மகேந்திராவின் இந்த லிஸ்டில் 90ஸ் நடிகைகளில் பிரபலமான ஒருவரின் பெயரும் அவ்வப்போது அடிபட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் அதை அதிகாரப்பூர்வமாக யாரும் உறுதிப்படுத்தவில்லை. இருந்தாலும் ஓரளவுக்கு அந்த நடிகைக்கு பாலு மகேந்திரா உடன் நெருக்கமான பழக்கம் இருந்ததை கிழக்குச் சீமையிலே படத்தில் நடித்த நடிகர் விக்னேஷ் ஒரு சம்பவத்தின் மூலம் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

பாலு மகேந்திரா கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய வண்ண வண்ண பூக்கள் திரைப்படம் 1992 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் பிரசாந்த் மற்றும் வினோதினி, மௌனிகா ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் பிரசாந்த் கேரக்டரில் முதலில் நடிக்கவிருந்தது நடிகர் விக்னேஷ் தான். ஆனால் அந்த ஹீரோ கேரக்டரில் தன்னுடைய உறவினர் ஒருவரை நடிக்க வைப்பதற்காக நடிகை அர்ச்சனா பாலு மகேந்திராவிடம் பேசி இருக்கிறார்.

Also Read:ஆடை குறைப்பு செய்தும் கிடைக்காத வாய்ப்பு.. சோசியல் மீடியாவே கதியாக இருக்கும் பப்ளி நடிகை

ஆனால் பாலு மகேந்திரா அவருக்கு பிடி கொடுக்காமல் விக்னேஷை நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறார். படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த இடத்திற்கே வந்து நடிகை அர்ச்சனா பாலு மகேந்திராவிடம் பயங்கர ரகளை செய்திருக்கிறார். பாலு மகேந்திரா அர்ச்சனாவை எதிர்க்க முடியாமல் விக்னேஷிடம் உனக்கு நான் அடுத்த பட வாய்ப்பு கண்டிப்பாக தருகிறேன் என்று சொல்லி திருப்பி அனுப்பி வைத்து விட்டாராம். அர்ச்சனா அந்த அளவுக்கு பாலு மகேந்திராவிடம் நெருக்கமாக இருந்தது தான் காரணம் என விக்னேஷ் சொல்லி இருக்கிறார்.

இறுதியில் அந்தப் படத்தில் ஹீரோவாக நடித்தவர் டாப் ஸ்டார் பிரசாந்த். பிரசாந்தின் நண்பராக நடித்த ராஜா என்பவர் தான் நடிகை அர்ச்சனாவின் உறவினர். அர்ச்சனா பாலு மகேந்திரா இயக்கத்தில் இரட்டைவால் குருவி மற்றும் நீங்கள் கேட்டவை போன்ற படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் கூட அவருக்கு அம்மாவாக நடித்தவர் தான் இந்த அர்ச்சனா.

Also Read:வாய்ப்புக்காக நைட் பார்ட்டி சென்ற நடிகை.. நண்பருடன் சேர்ந்து அலங்கோலப்படுத்திய நடிகர்

Trending News