வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

சிம்புவுடன் இணைந்த பிரபல நடிகர்.. எதிர்பார்ப்பை எகிற விட்ட அப்டேட்

சிம்புவின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. கௌதம் மேனன் இயக்கியிருந்த அந்த திரைப்படத்தில் முத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த சிம்பு அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அந்த அளவுக்கு அவருடைய நடிப்பு மிகவும் தத்துரூபமாகவும், எதார்த்தமாகவும் இருந்தது.

அதனால் இதன் இரண்டாம் பாகம் எப்போது வெளிவரும் என்று ரசிகர்கள் இப்போதே ஆவலுடன் காத்திருக்க தொடங்கிவிட்டனர். இந்நிலையில் சிம்புவின் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் பத்து தல திரைப்படத்தில் பிரபல நடிகர் கலையரசன் இணைந்திருப்பது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

Also read:சிவகார்த்திகேயனுக்கு கொடுப்பீங்க எனக்கு தர மாட்டீங்களா.. கறாராகப் பேசி சம்பளத்தை உயர்த்திய சிம்பு

கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் பத்து தல திரைப்படம் உருவாகிக் கொண்டிருக்கிறது. ஏ ஆர் ரகுமான் இசையமைக்கும் இந்த திரைப்படம் சில பல காரணங்களால் முடிவடையாமல் இழுத்துக் கொண்டே போனது.

தற்பொழுது பிரச்சனைகள் அனைத்தும் சரி செய்யப்பட்டு இப்படம் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் கௌரவ தோற்றத்தில் நடிக்க இருந்த சிம்பு தற்போது இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார்.

Also read:இளசுகளை சொக்க வைத்த மெலோடி.. நம்பர் ஒன் ட்ரெண்டிங்கில் சிம்புவின் மல்லி பூ சாங்

பாதிக்கு மேல் படம் முடிவடைந்த நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கலையரசன் இந்த படத்தில் சிம்புவுடன் இணைந்து நடிப்பது பற்றி தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

மெட்ராஸ், சார்பட்டா பரம்பரை போன்ற பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கும் கலையரசன் சிம்புவுடன் இணைந்து நடிப்பது மிகவும் மகிழ்ச்சியை கொடுக்கிறது என்று கூறியிருக்கிறார். மேலும் இந்த படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தாலும் அது தனக்கு நிறைவை கொடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவருடைய இந்த ட்வீட் தற்போது வைரலாகி கொண்டு இருக்கிறது.

Also read:கேப்டன் மில்லருக்கு பின் சிம்பு பட இயக்குனருடன் கூட்டணி போடும் தனுஷ்.. மாஸ் அப்டேட்

Trending News