வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

மனைவி இருக்கும் போதே நடிகைக்கு தாலி கட்டிய வாரிசு நடிகர்.. நான்கே மாதத்தில் முடிவு கட்டிய அப்பா!

Gossip News: வட இந்தியாவில் இருந்து இறக்குமதி ஆகி, ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களையும் கிரங்கடித்தவர் தான் அந்த நடிகை. ஆரம்ப காலத்தில் பட வாய்ப்புகள் அவ்வளவாக அமையாமல் இருந்தாலும், போகப் போக நடிகைக்கு பெரிய ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்புகள் அதிகமாக கிடைத்தது.

முன்னணி ஹீரோக்கள், ஹிட் படங்கள் என கொடிகட்டி பறந்த அந்த நடிகைக்கு, தன்னுடன் நடித்த வாரிசு நடிகர் ஒருவர் மீது பயங்கரமாக காதல் பற்றி கொண்டது. வாரிசு நடிகரும் நடிகையை உருகி உருகி காதலித்திருக்கிறார். இதில் கொடுமை என்னவென்றால் அவருக்கு திருமணம் ஆகி குழந்தைகளும் இருந்திருக்கின்றன.

காதலுக்கு திருமணம் தடை இல்லை என்று தவறாக புரிந்து கொண்ட இந்த நட்சத்திர ஜோடி, தனிமையில் காதலையும் வளர்த்திருக்கிறார்கள். அதற்கு ஏற்றார் போல் இன்னும் பிரச்சனை பற்றி எரியட்டும் என இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தொடர்ந்து இவர்கள் இருவரும் இணைந்து நடிப்பதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றனர்.

நான்கு வருடங்களாக வளர்த்து வந்த இந்த காதலை திருமண உறவாக மாற்ற முயற்சி செய்திருக்கிறது இந்த ஜோடி. வாரிசு நடிகரும் குடும்பத்தையும், தன்னுடைய அப்பாவுக்கு சினிமா உலகில் இருக்கும் பெயரையும் மறந்து விட்டு நடிகையின் கழுத்தில் தாலி கட்டி மனைவியாக ஆக்கிக் கொண்டார். 4 மாதங்கள் நடிகையின் வீட்டிலேயே கணவன் மனைவியாக இருவரும் வாழ்ந்திருக்கிறார்கள்.

சினிமா உலகில் தனக்கென ஒரு பெயரை சம்பாதித்து வைத்திருந்த அப்பா நடிகருக்கு இது மிகப் பெரிய பிரச்சனையை ஏற்படுத்த, மகனிடம் அந்த நடிகை வேண்டவே வேண்டாம் என மிரட்டி, சென்டிமென்ட் ஆக பேசி வழிக்கு வர வைத்திருக்கிறார். வாரிசு நடிகரும் குடும்ப கவுரவம் மற்றும் அப்பாவின் பெயருக்காக நடிகைக்கு டாட்டா காட்டி சென்று விட்டாராம்.

Trending News