Anjali: நடிகை அஞ்சலி ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் ஓஹோ என்று கொடிகட்டி பறந்தார். அதன் பின்னர் தன்னுடைய சொந்த பிரச்சினைகளால் திடீரென தலைமுறைவாகி விட்டார்.
அதன் பின்னர் மீண்டும் கம்பேக் கொடுத்த அஞ்சலியின் ஓவர் எடையால் ரசிகர்கள் அவருக்கு சரியான வரவேற்பை கொடுக்கவில்லை.
உடல் எடையை குறைத்தும் தமிழ் சினிமா ரசிகர்களிடம் அஞ்சலியின் செல்வாக்கு எடுபடவில்லை. தற்போது தெலுங்கு சினிமா பாக்கம் கரை ஒதுங்கி இருக்கிறார்.
பணம் வந்ததும் மாறிட்டாங்க
அஞ்சலி ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடிய படம் என்றால் அது. அங்காடி தெரு தான் கடையில் சேல்ஸ் கேலாக வேலை செய்யும் பெண் கேரக்டரில் தத்துரூபமாக நடித்திருந்தார்.
அந்த படத்தில் நடித்த கலைஞர்களில் அஞ்சலி தான் பெரிய வெற்றியை பார்த்தது. அவருடன் நடித்த பிளாக் பாண்டியும் ஒரு சில காலகட்டத்தில் நல்ல செல்வாக்குடன் இருந்தார்.
சமீபத்தில் அவர் தன்னுடைய பேட்டியில் அஞ்சலி பற்றி பகிர்ந்து இருக்கிறார். அங்காடி தெரு படபிடிப்பின் போது அஞ்சலி அவருக்கு நெருங்கிய தோழியாக இருந்தாராம்.
வாடி போடி என்று கூப்பிடும் அளவுக்கு இருவருக்கும் நெருங்கிய நட்பு இருந்திருக்கிறது. ஆனால் ஒரு சில நாட்களில் பாண்டியிடம் பேசுவதை ஏன் நிறுத்திக் கொண்டாராம்.
அதன் பின்னர் ஒரு சில வருடங்கள் கழித்து ஜெயம் ரவியின் அப்பாடக்கர் படத்தில் இருவரும் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
அப்போது அஞ்சலியிடம் என்ன ஆச்சுடி ஏன் என்கிட்ட பேச மாட்டேங்கிற என்று கேட்டிருக்கிறார்.
அப்போது கூட அஞ்சலி அவரிடம் சரியாக முகம் கொடுத்து பேசவில்லையாம். பணம் வந்தால் எல்லோரும் மாறிவிடுகிறார்கள் என்று பாண்டி சொல்லி இருக்கிறார்.