உலக அழகி பட்டம் பெறுவது என்பது சாதாரண விஷயம் அல்ல. வெறும் வெளியிலுள்ள அழகை மட்டும் வைத்து அந்த பட்டம் யாருக்கும் கொடுப்பதில்லை. இதற்கு நிறைய வழிமுறைகள் இருக்கிறது. இந்நிலையில் உலக அழகி பட்டம் பெற்ற ஐஸ்வர்யா ராயுடன் நடிக்க வேண்டும் என பல நடிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றனர்.
தற்போது ஐஸ்வர்யா ராய் எந்திரன் படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 12 வருடம் கழித்து மீண்டும் தமிழ் சினிமாவில் பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். இதே படத்தில் மிஸ் சென்னை பட்டம் பெற்ற த்ரிஷாவும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.
Also Read :பெரிய மனுஷன் என நிரூபித்த மணிரத்தினம்.. வசூலில் 3வது இடத்தை பிடிக்க இதுதான் காரணம்
இந்நிலையில் செப்டம்பர் 30ஆம் தேதி பொன்னியின் செல்வன் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் கதாநாயகன் பொன்னியின் செல்வன் அதாவது அருள்மொழிவர்மன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் ஜெயம் ரவி. இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய ஜெயம் ரவி இதுவரை யாரும் யோசிக்காத ஒரு விஷயத்தை கூறுவதாக சொல்லி இருந்தார். அதாவது மூன்று அழகிகளுடனும் நான் நடித்துள்ளேன் என கூறியிருந்தார். அதாவது பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய் மற்றும் திரிஷா இருவரும் ஜெயம் ரவி உடன் நடித்துள்ளார்.
Also Read :ஜெயம் ரவிக்கு மட்டும் ரெண்டு கொம்பா.. முடியவே முடியாது என மறுத்த மணிரத்தினம்
மேலும் உனக்கும் எனக்கும படத்தில் திரிஷாவுக்கு ஜோடியாக ஜெயம் ரவி நடித்திருந்தார். மேலும் பொன்னியின் செல்வன் படத்தில் வானதி என்ற கதாபாத்திரத்தில் நடித்த சோபிதா மிஸ் இந்தியா பட்டம் பெற்றவர். இவ்வாறு திரிஷா, சோபிதா, ஐஸ்வர்யா ராய் மூவருடனும் தான் நடித்துள்ளதாக ஜெயம் ரவி பெருமையாக கூறியிருந்தார்.
இந்த மூன்று அழகிகளுமே பொன்னியின் செல்வன் படத்தில் இடம் பெற்றது மிகப் பெருமையான விஷயமாகும். மேலும் சரித்திர நாவலில் இயக்குனர் மணிரத்தினம் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ற கனகச்சிதமான நடிகர், நடிகைகளை தேர்வு செய்துள்ளதே படத்திற்கு சிறப்பு அம்சமாக அமைந்துள்ளது.
Also Read :டாப் இயக்குனர்களை வளர்த்துவிட்ட குருக்கள்.. கமல்ஹாசனிடம் வேலை செய்த ஜெயம் ரவி