புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

29 வயசு வித்தியாசத்தில் திருமணம்.. 60 வயதில் மூன்றாவது மனைவிக்கு அடி போட்ட பிரபல நடிகர்

சினிமாவை பொறுத்தவரையில் தன்னுடன் நடித்த நடிகைகளை திருமணம் செய்துகொண்டு சில வருடங்களிலேயே விவாகரத்து பெறுவது சர்வ சாதாரணம் ஆகி விடுகிறது. ஆனால் இப்போது பிரபல நடிகர் செய்த காரியம் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

அதாவது நடிகர் முதலில் தன்னுடன் நடித்த சக நடிகையை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக விவாகரத்து பெற்ற பிரிந்து விட்டனர். அதன் பிறகு இரண்டாவது திருமணமும் பிரபல நடிகர் செய்து கொண்டார். அந்தச் சமயத்தில் ஒரு சூப்பர் ஹிட் படத்தில் நடித்திருந்தார்.

Also Read : வெளியில் தான் ஹீரோ, வீட்டுக்குள்ள ஜீரோ.. நடிகரை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மனைவி

அப்போது தன்னுடன் கிட்டதட்ட 29 வயது வித்தியாசத்தில் உள்ள பெண்ணுடன் நடித்திருந்தார். அதன் மூலம் இவர்கள் இருவருக்குமே தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது அரசல் புரசலாக நடிகையின் மனைவிக்கு தெரிந்துள்ளது. இதனால் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு பூதாகரமாக வெடித்துள்ளது.

இதனால் இரண்டாவது மனைவியும் நடிகரிடம் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். அந்த சமயத்தில் இந்த நடிகையை திருமணம் செய்து கொண்டால் பெரிய பிரச்சனையாகிவிடும் என்று நடிகர் அமைதி காத்தார். இப்போது கிட்டத்தட்ட சில வருடங்கள் ஆன பிறகு இந்த விஷயம் வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது.

அதாவது தன்னுடைய அறுபதாவது வயதில் அந்த நடிகையை திருமணம் செய்து கொள்ள உள்ளாராம். அதுவும் தனது நெருங்கிய உறவினர்களை மட்டும் வைத்து இந்த திருமணம் நடக்க இருக்கிறதாம். காலம் போன கடைசியில் இவருக்கு இப்போது திருமணம் தேவையா என ரசிகர்கள் விளாசி வருகிறார்கள்.

Also Read : ஆணழகு நடிகர்களிடம் மயங்கி கிடந்த நடிகை.. இறுதியில் கொத்திக் கொண்டு போன இயக்குனர்

Trending News