வியாழக்கிழமை, நவம்பர் 14, 2024

ரஜினியை விட கமலுக்கு டஃப் கொடுத்த ஹீரோ.. பின்னாலே ஓடிய ஏவிஎம் நிறுவனம், அடுத்தடுத்து வெள்ளி விழா

Rajinikanth – Kamal Haasan: 90களின் காலகட்டத்தில் ரஜினி மற்றும் கமலஹாசன் இருவருக்கும் இடையே தான் மிகப்பெரிய போட்டியிருந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அதெல்லாம் சும்மா பூச்சாண்டி கதை தான். கமல் ரஜினி தாண்டி இப்போது எந்த ஹீரோக்களின் பெயரும் வெளியில் வரவில்லை. இருந்தாலும் அந்த காலத்தில் இவர்கள் பார்த்து ஜெர்க் ஆகும் அளவிற்கு சில ஹீரோக்கள் படம் பண்ணி இருக்கிறார்கள்.

அதிலும் உலகநாயகன் கமலஹாசனுக்கு ஒரு நடிகர் பயங்கர போட்டியாக இருந்திருக்கிறார். அவர் படம் ரிலீஸ் ஆகும் நேரத்தில் கமல் படம் ரிலீஸ் ஆனால் கண்டிப்பாக தகிடு தத்தம் ஆடிவிடும் என்று பயப்படும் அளவிற்கு அந்த ஹீரோ இருந்திருக்கிறார். மேலும் கமலை வளர்த்து விட்ட ஏவிஎம் நிறுவனம் அந்த ஹீரோவின் பின்னாடியே தவமாய் தவமிருந்து படங்கள் பண்ணி வெற்றி விழா கொண்டாடி இருக்கிறார்கள்.

Also Read:லோகேஷ்க்கு பின் பிரம்மாண்ட கூட்டணியில் தலைவர்-172.. ஹைப் குறையாம தொக்கா தூக்கிய ரஜினி

உதவி இயக்குனராகவும், வசன ஆசிரியராகவும் இருந்து இப்போது திரைக்கதை உலகின் மன்னன் என்ற பெயரை எடுத்த பாக்யராஜ் தான் அந்த நடிகர். ஆள் கிடைக்காத நேரத்தில் ஒப்புக்கு சப்பான் ஆக அவருடைய குருநாதர் பாரதிராஜா ஒரு சில கேரக்டர்களில் பாக்கியராஜை நடிக்க வைத்திருக்கிறார். பின்னர் புதிய வார்ப்புகள் என்னும் படத்தில் பாக்யராஜை ஹீரோவாகவே மாற்றிவிட்டார் இயக்குனர் இமயம்.

ஒரு பக்கம் கமலஹாசன் பயங்கர கிளாஸ் ஆக நடித்துக் கொண்டிருந்த நேரத்தில், பாக்யராஜ் வளைத்து போட்டது மொத்தமும் குடும்பப் பெண்கள் தான். பாக்யராஜின் படம் என்றால் பெண்கள் கூட்டம் கூட்டமாக தியேட்டருக்குள் வரும் அளவிற்கு இருந்திருக்கிறது. இதற்கு எல்லாம் காரணம் அவர் பெண்கள் சமாச்சாரத்தை தன்னுடைய திரை கதையில் வைத்தது தான்.

Also Read:72 வயதிலும் 1200 கோடி பட்ஜெட்டில் நடிக்கும் ரஜினி.. ரெண்டு வருடத்தில் 4 படங்களில் பிசி

பாக்யராஜின் அசுர வளர்ச்சியை பார்த்த ஏ வி எம் தயாரிப்பு நிறுவனம் அவருடன் இணைந்து பணியாற்றிய படம் தான் முந்தானை முடிச்சு, கிட்டத்தட்ட 25 வாரங்கள் திரையரங்கில் ஓடி வெள்ளி விழா கண்டது இந்த படம். மேலும் அந்த வருடத்திற்கான பல விருதுகளை அள்ளி குவித்ததோடு இந்திய மொழிகள் அத்தனையிலும் ரீமேக் செய்யப்பட்டு நல்ல வரவேற்பையும் பெற்றது.

பாக்யராஜின் படம் ரிலீஸ் ஆகிறது என்றாலே முன்னணி ஹீரோக்கள் பல இட்கள் கொடுத்திருக்கிறார் இவர். மௌன கீதம், பாமா ருக்மணி, தூரல் நின்னு போச்சு, இது நம்ம ஆளு, அந்த ஏழு நாட்கள், டார்லிங் டார்லிங் டார்லிங், தாவணி கனவுகள் போன்ற படங்களை இவரை தவிர வேறு யாராலும் எடுக்க முடியாது.

Also Read:வெற்றிக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு.. என்னதான் சொகுசாக இருந்தாலும் ரஜினிக்கு இதுல கிடைக்க சுகமே வேற

- Advertisement -spot_img

Trending News