திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அஜித், விஜய், கமலுடன் ஜோடி போட்ட பிரபல நடிகை.. சூப்பர் ஸ்டாருடன் மட்டும் கிடைக்காத வாய்ப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் ஆவது நடித்து விட வேண்டும் என்பது எல்லா ஹீரோயின்களின் ஆசை. ஆனால் கிட்டத்தட்ட பல வருடங்களாக தமிழ் சினிமாவில் நடித்து கொண்டிருக்கும் ஒரு நடிகை தற்போது வரை ரஜினியுடன் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை.

கமல், விஜய், அஜித், தனுஷ் என்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்த பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார் நடிகை. ஏராளமான ரசிகர்களை தன் வசம் வைத்துள்ள நடிகை திருமணத்திற்கு பிறகு சிறிது காலம் பிரேக் எடுத்துக்கொண்டு மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.

Also Read : ரஜினியை மெண்டல் ஹாஸ்பிடலில் சேர்த்த பிரபலம்.. சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட சூப்பர்ஸ்டார்

மேலும் இத்தனை ஆண்டு சினிமாவில் இருந்தும் என்ன பிரயோஜனம் சூப்பர் ஸ்டாருடன் ஒரு படத்தில் கூட நடிக்க முடியவில்லை என்ற வருத்தம் அவருக்கு எப்போதுமே உள்ளதாம். அதாவது புன்னகை இளவரசி சினேகா தான் ரஜினியோடு தற்போது வரை ஒரு படத்தில் கூட நடித்ததில்லை.

கமலுடன் வசூல்ராஜா எம்பிபிஎஸ், விஜய் உடன் வசீகரா, அஜித்துடன் ஜனா, தனுஷ் உடன் புதுப்பேட்டை போன்ற படங்களில் சினேகா நடித்துள்ளார். மேலும் ரஜினியின் சூப்பர் ஹிட் ரீமேக் படமான முரட்டுக்காளை படத்தில் சுந்தர் சி-க்கு ஜோடியாக சினேகா நடித்திருந்தார்.

Also Read : 200 மடங்கு எனர்ஜியுடன் களத்தில் நிற்கும் ரஜினி.. வாரிசுகளால் வந்த விடிவு காலம்

இந்நிலையில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான கோச்சடையான் படத்தின் முதலில் சினேகா நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அந்தச் செய்தி வதந்தி என்று கூறப்பட்டது. ஒரு சில படங்களில் அவ்வப்போது ரஜினியுடன் வாய்ப்பு வந்தாலும் சந்தர்ப்ப சூழ்நிலையால் அது தவறி போய் உள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக கொடிகட்டி பறந்த சினேகாவுக்கு சூப்பர் ஸ்டார் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் கூட நடிக்க வாய்ப்பு கிடைக்காதது பலருக்கும் அதிர்ச்சியை அளிக்கிறது. இனிவரும் காலங்களிலாவது ரஜினி படத்தில் சினேகா நடிக்கிறாரா என்பதை பார்ப்போம்.

Also Read : சண்டைக் காட்சியில் பின்னி பெடல் எடுத்து 5 ஹீரோயின்கள்.. விஜயசாந்திக்கு டஃப் கொடுத்த சினேகா

Trending News