Simbu: நயன்தாரா- சிம்பு காதல் விஷயம் கோலிவுட்டில் ஆக பழமையான விஷயம்தான்.
ஆனால் அவ்வப்போது இவர்கள் இருவரது வாழ்க்கையிலும் மசாலாக்களை தூவ நினைப்பவர்கள் இந்த காதல் கதையை பேசுவது உண்டு.
இன்று சிம்பு தன்னுடைய நாற்பத்தி இரண்டாவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.
இந்த நிலையில் ஆறு வருஷத்துக்கு முன்னாடி பிரபல நடிகை ஒருவர் கொடுத்த இன்டர்வியூ சமூக வலைத்தளத்தில் இப்போது வைரலாகி வருகிறது.
நயனுக்காக தான் சிம்பு என்னை ஏமாத்துனாரு
ஐயா மற்றும் சந்திரமுகி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை தன் பக்கம் நயன்தாரா இழுத்துக் கொண்டு இருந்த காலகட்டம் அது.
அப்போதுதான் வல்லவன் படம் மூலம் மொத்தமாக பெயரை கெடுத்துக் கொண்டார். அவர் அப்படி நடிப்பதற்கு காரணமே சிம்புவின் மீது இருந்த காதல் தான்.
கிட்டத்தட்ட படம் முடிந்த கையோடு திருமணம் செய்து கொள்ளும் ஐடியாவில் தான் இருந்தார்கள். அதன் பின்னர் பிரச்சினை ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டார்கள்.
இந்த நிலையில் வல்லவன் படத்தில் நடித்த சந்தியா ஒரு விஷயத்தை பகிர்ந்து இருக்கிறார்.
அதாவது வல்லவன் படத்தில் முதலில் சிம்புவுக்கு ஒரு முன்னால் காதலி இருப்பார் சந்தியா அவருடைய நெருங்கிய தோழியாக வருவார்.
சந்தியா மீது பொசசிவ் ஆகி அவரை கடத்துவது போல் தான் மொத்த படமும் எழுதப்பட்டிருந்தது. ஆனால் சந்தியாவிடம் சொன்ன கதையை அப்படியே மாற்றி படமாக எடுத்திருக்கிறார் சிம்பு.
இதற்கு காரணம் நயன்தாரா படத்துக்குள் வந்தது தான் என்கிறார்கள். தன்னுடைய காதலிக்காக தான் எழுதிய கதையையே மொத்தமாக மாற்றி இருக்கிறார் சிம்பு.