சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

ஜாஃபர் சாதிக்குடன் தொடர்பா? கேஸ் போட்டு எல்லாரையும் உள்ள தள்ளிடுவேன்.. மிரட்டிய பிரபல நடிகை

Jaffer Sadiq: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஜாஃபர் சாதிக் கஞ்சா கடத்தல் வழக்கில் சிக்கி இருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. 2000 கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ஜாஃபர் தலைமறைவாகி இருக்கும் அதே நேரத்தில், அவருடன் இந்த கடத்தல் விஷயத்தில் தொடர்புடையவர்கள் யார் என்ற விசாரணையும் துரிதமாக நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து நடைபெற்று வரும் விசாரணையில் அவருடைய வீட்டிற்கு யார் யார் வந்து போனார்கள் என்று இப்போது சிசிடிவி கேமராவை வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதன் மூலம் தமிழ் சினிமாவில் இருக்கும் நிறைய பிரபலங்கள் போலீஸ் நடத்தும் விசாரணை வட்டத்திற்குள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்த பஞ்சாயத்தில் இயக்குனர் அமீரின் பெயர் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

போலீசார் விசாரணைக்கு அழைத்தால் எந்த நேரத்திலும் வருவதற்கு ரெடியாக இருப்பதாக அமீர் தைரியமாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் ஜாஃபர் சாதிக்கு உடன் சினிமா துறையைச் சேர்ந்த யார் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கும் என்ற வியூகம் தொடர்ந்து எழுந்து வருகிறது. அவருடன் பணியாற்றிய நிறைய நடிகர்கள் மற்றும் நடிகைகளின் பெயர்களை இப்போது இந்த கேசுக்குள் இழுத்து வந்து கொண்டிருக்கிறார்கள்.

Also Read:என் குடும்பத்தை ரொம்ப காயப்படுத்திட்டீங்க.. வேதனையுடன் ராஜன் அமீர் வெளியிட்டுள்ள வீடியோ

அப்படி ஒரு யூடியூப் சேனல் நடிகை கயல் ஆனந்திக்கும் ஜாஃபருக்கும் தொடர்பு இருப்பதாக பேசி இருக்கிறது .பரியேறும் பெருமாள், கயல் போன்ற படங்களின் மூலம் ரசிகர்களிடையே பரீட்சயமானவர்தான் ஆனந்தி. திருமணம் ஆன பிறகு ஆனந்திக்கு அவ்வளவாக மார்க்கெட் எதுவும் இல்லை. இப்போது அவருடைய கைவசம் மங்கை என்ற படம் தான் இருக்கிறது.

மங்கை படத்தை தயாரித்து இருப்பது ஜாஃபர் சாதிக் தான் இந்த பட விழாவில் போது நடிகை கயல் ஆனந்தி அவரை ஆகா ஓகோ என்று புகழ்ந்து பேசி இருந்தார். தற்போது அவர் கஞ்சா கேசில் சிக்கி இருப்பதால் அந்த யூட்யூப் சேனல் கயல் ஆனந்தி அவருடைய கணவரிடமிருந்து விவாகரத்து வாங்கி விட்டதாகவும் ஜாஃபருடன் அவருக்கு தொடர்பு இருப்பதாகவும் இஷ்டத்திற்கு கதை அளந்து விட்டிருக்கிறது.

இதற்கு பதிலளித்திருக்கும் கயல் ஆனந்தி மனசாட்சி இல்லாதவர்கள் பணத்திற்காக தேவையில்லாததை பேசுகிறார்கள். நான் என் கணவருடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறேன். அவர் அந்த படத்தின் தயாரிப்பாளர் என்பதால் அங்கு அவரை பற்றி பேசினேன். என் கணவர் அந்த யூட்யூப் சேனல் மீது கேஸ் போடலாம் என்று சொல்லி இருந்தார். நான் தான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். பணத்துக்காக செய்தியை தப்பாக போட வேண்டாம் என்று அந்த சேனலை எச்சரித்து இருப்பதாகவும் ஆனந்தி சொல்லியிருக்கிறார்.

Also Read:துணிச்சலான கதையில் கயல் ஆனந்தி.. பதப்பதைக்க வைக்கும் மங்கை ட்ரெய்லர்

Trending News