ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

தொடர்ந்து விஜய் படங்களை ஹிந்தியில் ரீமேக்? இப்பதான் ஒன்னு முடிஞ்சது.. அடுத்தது இந்த படம்

பீஸ்ட் படத்தை தொடர்ந்து, விஜய் 69 படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இப்படத்தில் அவர்களுடன் இணைந்து கெளதம் மேனன், மமிதா பைஜு, பாபி தியோல் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.

அதேபோல் சூர்யா 44 படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே. இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார்.

பாலிவுட் இளம் நடிகருக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே

தன் அழகாலும், திறமையாலும் ரசிகர்களைக் கட்டிப் போட்ட பூஜா ஹெக்டே அடுத்து இந்திப் படத்தில் நடிக்கிறார்.

விஜய்யின் தெறி படம் இந்தியில் பேபி ஜான் என்ற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது. இதில், வருண் தவானுடன், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அட்லீ தயாரித்துள்ளார்.

இப்படம் டிசம்பர் 25 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. தொடர்ந்து, விஜய்யின் மற்றொரு ஹிட் பட ரீமேக்கில் வருண் தவான் நடிக்கிறாரா என கேள்வி எழுந்துள்ளது.

இதில் வருண் தவானுக்கு ஜோடியாக முதன் முதலாக பூஹா ஹெக்டே நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News