வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பாலாவின் காலில் விழுந்த பாலிவுட் நடிகை.. வட இந்தியாவில் நடந்த சம்பவம்

Director Bala: ஒரு காலகட்டத்தில் பாலா மீது தமிழ் சினிமாவில் எல்லோருக்குமே மரியாதை இருந்தது. அதேபோல் தான் அஜித்தும் பாலா மீது நம்பிக்கையும், மரியாதையும் வைத்திருந்தார். அதுமட்டுமின்றி நான் கடவுள் படத்தில் முதலில் அஜித் தான் நடிப்பதாக இருந்தது. இதற்கான குறிப்பிட்ட அட்வான்ஸ் தொகையையும் தயாரிப்பு நிறுவனம் கொடுத்துள்ளது.

ஆனால் நடுவில் பாலா மற்றும் அஜித்திடையே ஏதோ பிரச்சனை ஏற்பட்டதன் காரணமாக வாக்குவாதம் நடைபெற்று இருந்தது. கடைசியில் அஜித்தும் தான் வாங்கிய அட்வான்ஸ் தொகையை திருப்பிக் கொடுத்து விட்டார். இந்நிலையில் பாலாவுக்கு தமிழ் சினிமாவில் மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் இருந்த மதிப்புக்கு ஒரு சம்பவம் நடந்தேறி உள்ளது.

Also Read : ராகவா லாரன்சுக்கு டஃப் கொடுக்கும் விஜய் டிவி பாலா.. 5 வருட கனவை நனவாக்கிய புகைப்படம்

அதாவது நான் கடவுள் படப்பிடிப்பு காசியில் நடைபெற்ற இருந்தது. அது வட இந்தியா என்பதால் தன்னை அங்கு யாருக்கும் தெரியாது என்று ரோட்டில் நடந்து கொண்டிருந்தார் பாலா. அப்போது ஒரு குரல் பாலாஜி என்று கேட்டுள்ளதாம். யார் என்று திரும்பிப் பார்க்கும்போது ஒருவர் பாலாவிடம் பக்கத்தில் எங்கள் படத்தின் சூட்டிங் நடக்கிறது நீங்கள் வந்து பார்க்க வேண்டும் என வற்புறுத்தி உள்ளார்.

பாலாவும் அவரது அன்பு கட்டளைக்கு இணங்க அங்கு சென்றுள்ளார். அப்போது பாலிவுட் நடிகை ராணி முகர்ஜியின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. பாலாவை பார்த்த உடனே மிகுந்த மகிழ்ச்சி அடைந்த ராணி முகர்ஜி அவரின் காலில் விழுந்து மரியாதை செலுத்தினாராம். 16 வயதிலேயே சினிமாவுக்கு வந்த ராணி முகர்ஜி பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

Also Read : போலீஸ் கேரக்டரில் அசத்திய 5 நடிகைகள்.. மொத்தமாக மாறிய பாலா பட நாச்சியார்

மேலும் ராணி முகர்ஜி தமிழில் கமலஹாசன் நடிப்பில் வெளியான ஹேராம் படத்தில் நடித்திருந்தார். இப்போது பாலிவுட்டில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அவர் பாலாவிடம் காலில் விழுந்த ஆசிர்வாதம் பெற்றிருந்தார் என்பது மிகப்பெரிய விஷயம். இந்நிலையில் திக்குத் தெரியாத இடத்தில் கூட பாலாவின் புகழ் பறந்து விரிந்து கிடந்தது.

ஆனால் இப்போது தனது பெயரை பாலாவை டேமேஜ் செய்து கொண்டு இருக்கிறார். சமீபத்தில் பாலா உடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வணங்கான் படத்தில் இருந்து சூர்யா வெளியேறினார். அதுமட்டுமின்றி அவரது படத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் தயக்கம் காட்டி வருகிறார்கள். இப்போது வணங்கான் படத்தில் சூர்யாவுக்கு பதிலாக அருண் விஜய் நடித்து வருகிறார்.

Also Read : விடாமல் சுற்றி வந்த விஜய் டிவி பிரபலம்.. கொடூர முகத்தை காட்டி கலங்கடித்த பாலா

Trending News