Dhanush: ராயன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ஆகிய படங்களை தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் உருவாகி வருகிறது இட்லிகடை படம். இதில் தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ள நிலையில் அவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருக்கிறார்.
அருண் விஜய், ராஜ்கிரன், பிரகாஷ்ராஜ் போன்ற முக்கிய நடிகர்களும் இந்த படத்தில் இடம்பெறுகின்றனர். மேலும் இட்லி கடை படத்தின் மீதான எதிர்பார்ப்பு தனுஷ் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது.
இந்த சூழலில் பெரும் தொகைக்கு இட்லி கடை படத்தின் ஓடிடி வியாபாரம் ஆகியிருக்கிறது. சமீபகாலமாக பெரிய நடிகர்களின் படங்கள் கூட ஓடிடியில் அதிகமாக விற்கப்படவில்லை.
இட்லிகடை படத்தின் ஓடிடி உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்
ஏனென்றால் தங்களுக்கு உள்ளான பட்ஜெட்குள் அந்த படம் வருகிறதா என்பதை பார்த்துவிட்டு தான் வாங்குகிறார்கள். மேலும் பெரும் நம்பிக்கையில் பெரிய நடிகர்களின் படங்களை வாங்கிய நிலையில் தியேட்டரிலேயே அது சரியாக போகவில்லை.
இப்போது இட்லிகடை படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் கைப்பற்றி இருக்கிறது. அதுவும் கிட்டத்தட்ட 45 கோடி கொடுத்து இட்லிகடை படத்தின் டிஜிட்டல் உரிமையைப் பற்றி இருக்கிறதாம்.
இது தவிர சாட்டிலைட் மற்றும் ஆடியோ உரிமைகள் பல கோடிக்கு வியாபாரம் ஆக இருக்கிறது. ஆகையால் ரிலீஸ்-க்கு முன்பே தனுஷின் இட்லி கடை படம் நல்ல லாபத்தை பெரும் என்று கூறப்படுகிறது.