ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

ஜெயிலர் ரிலீஸ் வைத்து அக்கப்போர் பண்ணும் பிரபல நிறுவனம்.. இப்படி எல்லாம் ஒரு விளம்பரம் தேவையா!

Jailer Movie: படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்களை கொண்டாடும் ரசிகர்கள் இருக்கும் வரை படத்திற்கு தோல்வி என்பது கிடையாது. தற்போது தமிழ் சினிமாவில் வெளிவரும் படங்களுக்கு அதிக ஆர்வம் காட்டி வரும் ரசிகர்கள், ஜெயிலர் படத்திற்கு ஒரு படி மேலே சென்று கொண்டாட, போட்ட முன்னேற்பாடு குறித்த தகவலை இங்கு காண்போம்.

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் மாபெரும் எதிர்பார்ப்பை உண்டுபடுத்தும் படம் தான் ஜெயிலர். இப்படத்தில் ஜாக்கி ஷெராப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால் போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்திருக்கிறார்கள்.

Also Read: கமல் மெனக்கெட்டு போன் பண்ணி கூப்பிட்டும் வர மறுத்த நடிகர்.. பிக் பாஸ் உங்களுக்கு காசு எனக்கு தூசு!

மேலும் படத்தில் ஜெயிலர் கதாபாத்திரம் ஏற்று நடிக்கும் ரஜினியின் கெட்டப் தெறிக்க விட்டு வரும் நிலையில், இப்படம் இம்மாதம் 10ம் தேதி வெளியாகிறது. அதை தொடர்ந்து ரஜினி ரசிகர்கள் முன்னேற்பாடுகளை செய்து வருகின்றன.

இதில் ஒரு படி மேலே சென்று யூ என் ஒ அக்வா கேர் என்னும் தனியார் நிறுவனம் ஒன்று ஜெயிலர் படம் ரிலீஸ் முன்னிட்டு தொழிலாளர்களுக்கு இலவச டிக்கட்டுகளுடன் விடுமுறையும் அறிவித்துள்ளது.

Also Read: ஒரே படத்தால் எல்லா கடனையும் அடைக்கும் நடிகர்.. பழைய படங்களை தூசி தட்டி வெளியிட காத்திருக்கும் தயாரிப்பாளர்கள்!

ரஜினியின் படம் பல தலைமுறைகளை பார்த்து வருவதால், இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் ஆகையால் முன்னேற்பாடாகவே இதற்கான விடுமுறையை அறிவித்துள்ளது இந்நிறுவனம். மேலும் இந்நிறுவனத்தின் அனைத்து கிளைகளுக்கும் இந்த சலுகை பொருந்தும் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தனியார் நிறுவனத்தின் அறிவிப்பு:

uno-care-jailer1
uno-care-jailer1

படம் என்பது பொழுதுபோக்குக்காக மட்டுமே  பார்க்கக்கூடிய ஒன்று. ஆனால் சமீப காலமாய் அதை கொண்டாடும் விதத்தில் தற்பொழுது இவர்கள் செய்து வரும் இது போன்ற அக்கப்போர்கள் பல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் விதமாய் இருந்து வருகிறது. மேலும் இது போன்ற பப்ளிசிட்டிக்காகவே இத்தகைய செயல்களை வதந்தியாக பரப்பி வருகின்றனர். இது ஒட்டுமொத்தமாய் பிரச்சனையை பூதாகரமாக்க வெளிவந்த பொய்யான தகவல் என கூறப்படுகிறது.

Also Read: ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்.. தாமதமான விடாமுயற்சி, சைடு கேப்பில் கல்லா கட்டிய அஜித்

Trending News