புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

சர்ச்சைகளால் கழட்டி விட்ட விஜய்.. ஹிட் பட இயக்குனர், இப்போ டம்மியாய் சுற்றும் பரிதாபம்

Thalapathy Vijay: எல்லா துறைகளிலும் ஜெயித்தவன் என்ன சொல்கிறானோ அதைத்தான் மற்றவர்கள் கேட்பார்கள். அதிலும் சினிமா துறை என்று வந்துவிட்டால் ஒரு ஹிட் படம் கொடுத்துவிட்டால் அவர்களை ஓஹோ என்று புகழ்ந்து தள்ளுவார்கள். அதே நேரத்தில் பிளாப் படங்கள் ஏதாவது கொடுத்து விட்டால் இருக்கும் இடம் தெரியாத அளவுக்கு மண்ணைத் தோண்டி புதைத்து விடுவார்கள். இதில் பாதிக்கப்பட்டவர்கள் நிறைய பேர்.

இப்படித்தான் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களை வைத்து ஹிட் படங்கள் கொடுத்த இயக்குனர் ஒருவர் தற்போது இருக்கும் இடம் தெரியாத அளவிற்கு டம்மியாக ஆகிவிட்டார். என்னுடன் ஒரு படம் பண்ணுங்கள் என இவர் கெஞ்சும் அளவிற்கு முன்னணி ஹீரோக்களும் இவரை சமீப காலமாக புறக்கணித்து வருகிறார்கள். இவரின் நிலைமை தற்போது தமிழ் சினிமாவில் ரொம்பவும் பரிதாபமாக ஆகிவிட்டது.

Also Read:லியோ சென்சாரில் தப்பித்தாலும் அவன்ட உங்க பருப்பு வேகாது.. தனக்குத் தானே ஆப்பு வைத்துக் கொண்ட லோகேஷ்

நடிகர் அஜித்குமாருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் தான் தீனா. இந்த படத்தை இயக்கியவர் ஏ ஆர் முருகதாஸ். தீனாவிற்கு பிறகு கேப்டன் விஜயகாந்த் இருக்கு ரமணா எனும் சூப்பர் டூப்பர் ஹிட் படத்தை கொடுத்தார். நடிகர் சூர்யாவின் அடுத்த கட்ட சினிமா நகர்வுக்கு முக்கிய காரணமாக இருந்த கஜினி படத்தை இயக்கியவரும் இவர்தான்.

இயக்குனர் அட்லிக்கு முன்பே தளபதி விஜய்க்கு ஹாட்ரிக் ஹிட்களை கொடுத்தவர்தான் ஏ ஆர் முருகதாஸ். இதில் கத்தி படத்தின் போது அந்த கதை தன்னுடையது என உதவி இயக்குனர் ஒருவர் புகார் அளித்து பின்னர் அந்த பிரச்சனை சமூகமாக பேசி தீர்க்கப்பட்டது. மேலும் விஜய்க்கு துப்பாக்கி மற்றும் சர்க்கார் என அடுத்தடுத்த ஹிட்களையும் கொடுத்தார்.

Also Read:ஜெயிலர் வசூலை லியோ முறியடிக்க கூடாது.. தந்திரமாய் காய் நகர்த்தும் ரெட் ஜெயண்ட் உதயநிதி

ஒரு சில சர்ச்சைகளால் விஜய், முருகதாஸுக்கு பட வாய்ப்புகள் கொடுப்பதை நிறுத்திக் கொண்டார். அதன் பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து முருகதாஸ் இயக்கிய தர்பார் படமும் மொத்தமாக சொதப்பி மண்ணை கவ்வியது. இதன் பின்னர் அக்கட தேசத்து ஹீரோக்களை நம்பி போன இவருக்கு அந்த ஹீரோ கலர் டாட்டா காட்டி திருப்பி அனுப்பி விட்டனர்.

இப்போதைக்கு முருகதாஸ் கைவசம் எந்த படங்களுமே இல்லை. சில வருடங்களுக்கு முன்பு வரை தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருந்த இவர், இப்போது இருக்கும் இடம் தெரியாமல் ஆகிவிட்டார். பட வாய்ப்புக்காக நடிகர் சிவகார்த்திகேயனை சமீபத்தில் இவர் அணுகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Also Read:லியோ, தலைவர் 171-க்கு நடுவில் சம்பவம் செய்ய போகும் லோகேஷ்.. கூட்டணி போடும் அனிருத்

Trending News