சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு சந்திரமுகி திரைப்படத்திற்கு பிறகு மிகப்பெரிய பிரேக் கொடுத்த திரைப்படம் என்றால் அது எந்திரன் தான். இயக்குனர் சங்கர் மற்றும் ரஜினி இருவரும் முதன்முதலாக சேர்ந்து பணியாற்றிய திரைப்படம் இது. முழுக்க முழுக்க தொழில்நுட்பத்தை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு கோடி கணக்கில் முதலீடு செய்யப்பட்டது. அதைவிட பல மடங்கு லாபத்தை இந்த படமும் வசூலித்தது.
இதில் வசீகரன் மற்றும் சிட்டி என்ற இரண்டு கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்திருப்பார். என்னதான் தொழில்நுட்பத்தை அதிகமாக உபயோகப்படுத்தி இருந்தாலும் இரண்டு கதாபாத்திரங்கள் ஒன்றாக இருப்பது போல் அமைக்கப்பட்ட காட்சிகளில் ரஜினிக்கு டூப் போடப்பட்டிருக்கிறது. அப்படி டூப் போட்டது பிரபல தமிழ் இயக்குனரின் மகன் என்று தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
Also Read:ரஜினியின் சம்பளத்தை நெருங்கும் LCU லோகேஷ்.. போட்டி போட்டு காசை அள்ளி கொட்டும் தயாரிப்பாளர்கள்
தமிழில் 16 வயதினிலே திரைப்படம் மூலம் இயக்குனராக தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கியவர் தான் இயக்குனர் இமயம் பாரதிராஜா. இந்த படத்தில் ரஜினி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் கூட நடித்திருப்பார். பாரதிராஜாவின் மகனான மனோஜ் குமாரை அவர் தாஜ்மஹால் என்னும் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார்.
அதன்பின்னர் மனோஜ் வருஷமெல்லாம் வசந்தம், சமுத்திரம், அல்லி அர்ஜுனா போன்ற படங்களில் நடித்தார். நல்ல நடிப்பு திறமை இருந்தும் அவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. பாரதிராஜாவின் இயக்கத்தில் மீண்டும் அன்னக்கொடி திரைப்படத்தில் வில்லனாகவும் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார். ஆனால் அதுவும் அவருக்கு கை கொடுக்கவில்லை.
சினிமாவில் எந்த வாய்ப்புகளும் கிடைக்கவில்லை, வாய்ப்புகளைத் தேடிச் செல்லவும் மனம் இல்லாத மனோஜ் தனக்கு சினிமா மட்டுமே தெரியும் என்பதால் இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து இருக்கிறார். அப்போதுதான் எந்திரன் திரைப்படத்தில் ரஜினிக்கு டூப் போடும் வாய்ப்பு இவருக்கு கிடைத்திருக்கிறது. இதை சமீபத்திய பேட்டி ஒன்றில் மனோஜ் பகிர்ந்து இருக்கிறார்.
தமிழ் சினிமாவை மற்றும் ஒரு கோணத்திற்கு கொண்டு சென்றவர் இயக்குனர் பாரதிராஜா. இன்று வரை சினிமாவில் வெற்றி முகத்தில் இருக்கும் அவரின் மகனான மனோஜ்ஜால் சினிமாவில் ஜெயிக்க முடியாமல் போனது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக தான் இருக்கிறது. எத்தனை தோல்வியை சந்தித்தாலும் அவர் இன்றுவரை சினிமாவை விட்டு விலகாமல் இருக்கிறார்.
Also Read:ரஜினியுடன் நடிக்க கூடாது.. நடிகையை நாடு கடத்திய எம்ஜிஆர்