வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

வெற்றியைத் தப்பா கணித்த பிரபல இயக்குனர்.. 6 மாதம் ஓடி வாயடைக்கச் செய்த சூப்பர் ஹிட் படம்

ஒரு படத்தின் வெற்றியை யாராலும் கணிக்க முடியாது. ஒரு மேடையில் உலகநாயகன் கமலஹாசன் ஒரு படத்தின் வெற்றியை சரியாக கணிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவரை கூட்டிட்டு வந்து பக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள் என்று வெளிப்படையாக கூறியிருப்பார். அந்த அளவிற்கு படத்தின் வெற்றியை கணிப்பது கடினம்.

உதாரணமாக இயக்குனர் பி. வாசு பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர். ரஜினி, பிரபு என மாஸ் ஹீரோக்களுக்கு பல வெற்றிகளை கொடுத்துள்ளார். அவராலேயே அவர் எடுத்த ஒரு படத்தின் வெற்றியை கணிக்க முடியவில்லை. அவர் ஒரே நேரத்தில் இரண்டு படங்களை எடுத்து வந்துள்ளார். ஒன்று சின்னதம்பி இன்னொன்று அதிகாரி.

1991 ஆம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில் அருண்பாண்டியன், கௌதமி, ஸ்ரீவித்யா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த அதிகாரி திரைப்படம் ஆக்ஷன் திரைப்படமாக வெளிவந்தது. அந்தக் காலத்தில் அருண்பாண்டியன் படம் என்றால் ரசிகர்கள் வெறித்தனமாக வந்து பார்ப்பதுண்டு. அதனால் இந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதே சமயத்தில் தான் 1992 ஆம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில் பிரபு, குஷ்பு, கவுண்டமணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த சின்னத்தம்பி திரைப்படத்தில் படிக்காத எளிமையான குடும்பத்து ஆணுக்கும், படித்த பணக்கார பெண்ணுக்கும் இடையேயான காதல் திரைப்படமும் வெளியானது. இந்தப் படத்திற்குப் பிறகு படத்தில் கதாநாயகியாக நடித்த குஷ்புவு-க்கு ரசிகர்கள் கோவில் கட்டும் அளவுக்கு அவரை பிரபலப்படுத்தியது.

அத்துடன் இந்தப் படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றுத் தந்தது மட்டுமல்லாமல் 9 திரையரங்கில் 356 நாட்களுக்கும் மேல் ஓடி சாதனை படைத்தது. அதுமட்டுமின்றி 45-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் சின்னத்தம்பி 100 நாள் ஓடியது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட வெற்றியை சின்னத்தம்பி பெரும் என படத்தின் இயக்குனர் பி.வாசு சுத்தமாகவே நம்பவில்லையாம்.

ஆகையால் அதிகாரி படம்தான் ஓடும் சின்னதம்பி படம் ஓடாது என்று அதை அவர் தம்பியிடம் விநியோகிக்கும் படி கூறியுள்ளார். ஆனால் சின்னத்தம்பி படம் தான் 6 மாத காலங்கள் திரையரங்கில் தாறுமாறாக ஓடி  அவருடைய கணிப்பு பொய் என்று காட்டியதால் வாயடைத்துப் போய் விட்டாராம். மேலும் அதிகாரி திரைப்படம் இயக்குனர் பி.வாசு நினைத்த அளவிற்கு ஓடவில்லை.

Trending News