சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

பெண் கேட்டு போன 6 அடி ஹீரோவின் அப்பா அம்மா.. நச்சுன்னு பதில் சொல்லி அனுப்பிய கீர்த்தி சுரேஷ்

Keerthy Suresh: நடிகை கீர்த்தி சுரேசை தங்கள் வீட்டு மருமகளாக்க ஆறடி ஹீரோ ஒருவரின் அப்பா அம்மா நேரடியாகவே பெண் கேட்ட தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. நடிகர் மற்றும் இயக்குனர் சித்ரா லட்சுமணன் தற்போது சினிமா நிகழ்வுகள் குறித்து You Tube சேனல்களில் பேசி வருகிறார்.

அவர் தான் தற்போது இந்த விஷயத்தை பகிர்ந்து இருக்கிறார். கீர்த்தி சுரேஷ் பொறுத்த வரைக்கும் ரஜினி முருகன் படத்தின் மூலம் தமிழ்நாட்டில் பெரிய அளவில் ரீச் அடைந்தார். கல்யாணம் பண்ணா இப்படி ஒரு பொண்ண தான் பண்ணனும்னு ரசிகர்கள் ஏங்கும் அளவுக்கு தன்னுடைய அழகால் கொள்ளையடித்தார்.

தொடர்ந்து சிவகார்த்திகேயன் உடன் ரெமோ, விஜய் உடன் பைரவா என அடுத்தடுத்து ஹிட் படங்கள் கொடுத்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்தார். இதற்கிடையில் பென்குயின் படத்திற்காக உடல் எடையை குறைத்த பிறகு பெரிய அளவில் தமிழ் பட வாய்ப்புகள் எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை.

நச்சுன்னு பதில் சொல்லி அனுப்பிய கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் நடிகர் விஷாலுடன் இணைந்து சண்டக்கோழி இரண்டாம் பாகத்தில் நடித்தது எல்லோருக்கும் நினைவிருக்கும். கம்பத்து பொண்ணு பாடலை கண்டிப்பாக நம்மில் பலரும் ஒரு காலகட்டத்தில் அதிகமாக கேட்டு ரசித்திருப்போம்.

இந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் கீர்த்தியை பார்த்து பிடித்துப் போன விஷாலின் அப்பா அம்மா இவரை விஷாலுக்கு திருமணம் செய்து வைத்துவிடலாம் என முடிவெடுத்து இருக்கிறார்கள். இது குறித்து கீர்த்தி இடமே பேசி இருக்கிறார்கள். ஆனால் கீர்த்தி நான் பல வருடங்களாக ஒருவரை காதலித்து வருகிறேன் அவரை தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என வெளிப்படையாகவே சொல்லி இந்த பிரச்சனையை முடித்து வைத்திருக்கிறார்.

Trending News