திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

தளபதியின் முடிவு, அடுத்த விஜய் என கொண்டாடப்படும் எஸ்.கே.. அப்போ அடுத்த எஸ்.கே யாரு தெரியுமா?

Thalapathy Vijay: தமிழ் சினிமா வட்டாரத்தில் கடந்த மாதம் வரையும் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார், அவர் சூப்பர் ஸ்டார் இடத்திற்கு போட்டி போடுகிறார் என நிறைய நெகட்டிவ் விமர்சனங்கள் அவர் மீது சுமத்தப்பட்டது. சூப்பர் ஸ்டார் பட்டம் என்ன, என்னுடைய இடமே எனக்கு வேண்டாம் என அரசியலுக்கு அடித்தளம் போட்டு விட்டார் விஜய். சினிமாவை விட்டு ஒதுங்க போவதாக அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்துவிட்டார்.

விஜய் எடுத்த இந்த முடிவால் தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற பேச்சு அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது. இப்போதைய பெரிய ஹாட் டாக் அடுத்து விஜய் இடத்தை பிடிக்க போவது யார் என்பதுதான். ஒரு பக்கம் அஜித் ரசிகர்கள் எங்களுக்கு இனிமே ரூட்டு கிளியர் என கொண்டாடிக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் முன்னணி ஹீரோக்களின் ரசிகர்கள் பலரும் எங்கள் தலைவன் தான் அடுத்த விஜய் என பஞ்சாயத்தை ஆரம்பித்து விட்டார்கள்.

Also Read:சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக தனுஷ் இறக்கிவிட்ட 50-வது பட போஸ்டர்.. மொட்டை கெட்டப்பில் மிரட்டல்

இப்போது தமிழ் சினிமாவில் அடுத்த விஜய் யார் என்ற ரேஸில் முன்னணியில் இருப்பவர் சிவகார்த்திகேயன் தான். சிவா நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஒரு பாட்டில், அண்ணன் அன்புக்கு அன்னை தெரசா, அடக்கத்தில் நெல்சன் மண்டேலா என்ற ஒரு வரி வரும். இப்போது மொத்தமாக சேர்த்து விஜய்யின் எல்லா குணமும் சிவகார்த்திகேயனுக்கு தான் இருக்கிறது, அதனால் அவர் தான் அடுத்த விஜய் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

அடுத்த சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா ஹீரோக்களின் இந்த பரமபத ஆட்டத்தில் சிவகார்த்திகேயன் முன்னேறி விஜய் இடத்திற்கு போய்விட்டால், அவருடைய இடம் காலியாக இருக்குமே அதை யார் நிரப்புவார்கள் என்று அடுத்த கேள்வி வந்துவிட்டது. இதை தான் பிள்ளை பெறுவதற்கு முன்னே பெயர் வைப்பது என்று சொல்வார்கள். அப்படி சிவகார்த்திகேயனின் இடத்தை நிரப்புவதற்கு முழு தகுதியும் உடைய ஆள் நடிகர் ரியோ ராஜ் தான் என பேசப்படுகிறது.

ஒன்று இரண்டு படங்களில் தலையைக் காட்டிக்கொண்டிருந்த ரியோ ராஜ் ஜோ படத்தின் மூலம் 2கே கிட்ஸ்களின் மொத்த ஆதரவையும் பெற்றுவிட்டார். படம் ரிலீஸ் ஆகி ஒரு சில மாதங்கள் ஆகியும் இன்று வரை அதன் தாக்கம் குறையவில்லை. அதனால் தான் ரியோவை சிவகார்த்திகேயன் இடத்தில் வைப்பது என முடிவு செய்து விட்டார்கள் போல. இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது ரியோ மற்றும் சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் ஒரே தேதியில் வருவதால் தானாம்.

தமிழ் சினிமா ரசிகர்கள் சொல்வதற்கு ஏற்றது போல ஜோ படத்திற்கு பிறகு தொடர்ந்து மூன்று படங்களில் கமிட் ஆகி இருக்கிறார் ரியோ. அப்போ அடுத்த விஜய் சிவகார்த்திகேயன், அடுத்த சிவகார்த்திகேயன் ரியோ என்று பிக்ஸ் செய்து விடலாமா என்று பார்த்தால், அப்போ நம்ம குட்டி சிவகார்த்திகேயன் எங்கே போவார் என்று ஒரு கூட்டம் வருகிறது. கிஸ், ஸ்டார் போன்ற அடுத்த அடுத்த படங்களை கைகளில் அடுக்கிக் கொண்டிருக்கும் கவின் தான் அந்த குட்டி சிவகார்த்திகேயன்.

Also Read:தனுசையே மிஞ்சிய சிவகார்த்திகேயன்.. டைட்டில் காப்பியில் இத்தனை படங்களா?

Trending News