வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அவ்ளோ நேரம் என் உதடு கொடுக்க முடியாது என கூறிய மண்வாசனை நடிகை.. கேரக்டரையே தூக்கிய கமல்

Actor Kamal Haasan: இப்போதைய காலகட்டத்தில் சினிமாவில் லிப் லாக் சீன் என்பதெல்லாம் ரொம்பவும் சகஜமாகிவிட்டது. கிளாமர் ஹீரோயின்களிலிருந்து, குடும்பப் பாங்கான கேரக்டரில் நடிக்கும் ஹீரோயின்கள் வரை எல்லோருமே இப்போது சர்வ சாதாரணமாக இது போன்ற காட்சிகளில் நடித்து விடுகிறார்கள். மேலும் இதுபோன்ற காட்சிகளில் நடிப்பதென்றால் அதுக்கென்று தனியே சம்பளம் என்று பேரம் பேசும் நடிக்கும் நடிகைகளும் இருக்கிறார்கள்.

ஆனால் எண்பதுகளின் காலகட்டத்தில் முத்த காட்சிகள் என்பதெல்லாம் ரொம்பவே அரிதான விஷயம். நடிகைகளில் பல பேர் முன் வந்து இதை செய்ய மாட்டார்கள். ஹீரோக்கள் கூட இது போன்ற நெருக்கமான காட்சிகளில் நடிக்க தயங்குவார்கள். இதற்கு மிக முக்கிய காரணம் இது போன்ற காட்சிகளில் நடித்து விட்டால் பெண் ரசிகைகளின் ஆதரவு குறைந்துவிடும் என்பது தான்.

Also Read:முத்தக்காட்சியின்னா உங்களுக்கு நோ கால்ஷீட்.. 90-களில் தயாரிப்பாளரை ஓட விட்ட 5 நடிகைகள்

அந்த காலகட்டத்திலேயே இப்படிப்பட்ட காட்சிகளில் தைரியமாக நடிக்கும் ஒரே நடிகர் கமலஹாசன் தான். இவருடைய நடிப்பில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் தான் புன்னகை மன்னன். இந்த படத்தில் கமலின் முதல் காதலியாக நடிகை ரேகா நடித்திருப்பார். அதன் பின்னர் நடிகை ரேவதி கமலை ஒரு தலையாக காதலித்து பின் கமலும் அந்த காதலை ஏற்றுக் கொள்வார்.

இதில் நடிகை ரேகாவுடன் தற்கொலைக்கு முயற்சி செய்யும் கமல், இருவரும் மலையிலிருந்து குதிப்பதற்கு முன்பு ரேகாவை உதட்டில் முத்தமிடுவார். இதைப்பற்றி பல பேட்டிகளில் நடிகை ரேகா சொல்லும் பொழுது, இப்படி ஒரு காட்சியை எடுக்கப் போகிறோம் என்று தன்னிடம் முன்பே சொல்லவில்லை என்றும், காற்று படமாக்கப்பட்டு கொண்டிருக்கும் பொழுது தான் கமல் தன்னை முத்தமிட்டதாகவும் சொல்லி அப்போது சர்ச்சையை கிளப்பினார்.

Also Read:திருமணத்திற்கு பின்பும் கொழுப்பெடுத்து திரிந்த நடிகை.. மாமனார் முன்பு அரைகுறை ஆடையில் அலைந்த கேவலம்

ரேகாவின் கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது நடிகை ரேவதி தானாம் . ரேவதியிடம் இந்த முத்தக் காட்சியை பற்றி சொன்ன பொழுது அவர் அது போன்ற கேரக்டரில் நான் நடிக்கவே மாட்டேன் என்று சொல்லிவிட்டாராம். கமலஹாசன் இந்த படத்தில் அந்த காட்சியை நீக்காமல் அதற்கு பதிலாக ரேவதியை நீக்கிவிட்டு ரேகாவை போட்டிருக்கிறார். பின்பு ரேவதிக்கு மற்றொரு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ரேகாவை இந்த கேரக்டரில் நடிக்க வைத்திருந்தாலும் இதுபோன்று ஒரு லிப் லாக் சீன் இருப்பதை அவரிடம் சொல்லாமல் தான் படமே எடுத்து இருக்கிறார்கள். நடிகை ரேவதி அந்த காலகட்டத்தில் முன்னணி ஹீரோயினாக இருந்தாலும் இது போன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்பதில் ரொம்ப தீர்க்கமாக இருந்திருக்கிறார். மேலும் முகம் சுளிக்கும் அளவுக்கு ரேவதி கிளாமர் காட்சிகளிலும் நடித்ததில்லை.

Also Read:நடிகையை பதம் பார்க்காமல் விடாத வாரிசு நடிகர்.. பழசை நோண்டி நொங்கெடுக்கும் பயில்வான்

Trending News