புதன்கிழமை, ஜனவரி 15, 2025

உங்கள மலைபோல் நம்பினேன் இப்படி கால வாரி விட்டுட்டீங்க.. விக்ரமால் பரிதவிக்கும் அடுத்த நயன்தாரா

Actor Vikram: நடிகர் விக்ரம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படம் தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக இருக்கிறது. படப்பிடிப்பு வேலைகளில் பிஸியாக இருக்கும் விக்ரம் பிரபல நடிகை ஒருவரை புலம்ப விட்டு இருக்கிறார்.

பொதுவாக லோ பட்ஜெட் படங்களில் நடிக்கும் ஹீரோயின்களுக்கு எப்போதாவது முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும். அப்படி சீயான் விக்ரம் உடன் கிடைத்த பட வாய்ப்பு ஒன்று கைநழுவி போனதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ரொம்பவும் கலக்கத்தில் இருக்கிறார். உண்மையை சொல்லப்போனால் இந்த படத்தை அவர் ரொம்பவே அதிகமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.

Also Read:கிராமத்து பட கவர்ச்சியில் சொக்க வைத்த 5 நடிகைகள்.. மண் மணம் மாறாத ராதா

ஐஸ்வர்யா ராஜேஷ் ஏற்கனவே விக்ரமுடன் சாமி 2 திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்த படம் வெற்றி பெறாததால் இந்த கூட்டணியும் பெரிதாக பேசப்படவில்லை. சமீப காலமாக தொடர்ந்து சோலோ ஹீரோயினாக இவர் நடித்து வருவதால், தமிழ் சினிமாவில் அடுத்து நயன்தாராவின் இடத்தை இவர் பிடிக்கப் போகிறார் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டது.

சோலோ ஹீரோயினாக எத்தனை படங்கள் பண்ணினாலும், முன்னணி ஹீரோக்களுடன் நடித்தால் தான் மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பது தமிழ் சினிமா கலாச்சாரம். அப்படி இருக்கும் பட்சத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் எதிர்பார்க்காத சம்பவமாக ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட துருவ நட்சத்திரம் படத்தை மீண்டும் தூசி தட்டி படக்குழு ரிலீஸ் செய்ய இருக்கிறது.

Also Read:சிலுக்கின் காதல் வலையில் சிக்கிய 4 பிரபலங்கள்.. தாடிக்காரரால் மரணத்தை தழுவிய சோகம்

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரமுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த இந்த துருவ நட்சத்திரம் திரைப்படம் ரிலீஸ் ஆன பிறகு கண்டிப்பாக தன்னுடைய மார்க்கெட் பெரிய லெவலில் இருக்கும் என்று அவர் எதிர்பார்த்து இருந்தார். ஆனால் படக்குழு ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த அத்தனை காட்சிகளையும் டெலிட் செய்திருக்கிறார்கள். இதற்கான சரியான காரணம் தெரியவில்லை.

மேலும் படப்பிடிப்பு வேலைகள் நடந்து கொண்டிருக்கும் பொழுதே படத்தின் ப்ரோமோஷன் ஆக ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் விக்ரம் இணைந்து நடித்த ஒரு மனம் நிற்க சொல்கிறது பாடல் ரிலீஸ் செய்யப்பட்டது. இது இன்று வரை ரசிகர்களின் பேவரைட் ஆகவும் இருக்கிறது. இந்த பாடல் காட்சியையும் தற்போது பட குழு ப்ரைவேட்டாக மாற்றி இருக்கிறது. இந்த படம் ரிலீசுக்கு பிறகு முன்னணி ஹீரோக்களின் பட வாய்ப்புகள் கிடைக்கும் என கனவு கண்ட ஐஸ்வர்யா ராஜேஷிற்கு இது மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்துவிட்டது.

Also Read:அடுத்த சில்க் ஸ்மிதா நாங்கள் தான் என போட்டி போட்ட 5 நடிகைகள்.. அட எல்லாமே டி ஆர் கண்டுபிடிப்பு தான்!

Trending News