சனிக்கிழமை, ஜனவரி 25, 2025

ரஜினியை பற்றி பேசி கேரியரை கெடுத்து கொண்ட பிரபலம்.. வடிவேலு போல் சுற்றி அடிக்கும் கர்மா

Rajinikanth: கெட்டாலும் மேன்மக்கள் மேன் மக்கள் தான் என்று சொல்வது உண்டு. அப்படிப்பட்ட மேன் மக்களை சில நேரங்களில் தவறாக பேசுபவர்கள் தங்களுக்கான கர்மாவை அவர்களே சம்பாதித்துக் கொள்கிறார்கள். இதற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாக வைகைப்புயல் வடிவேலுவை சொல்லலாம். விஜயகாந்தை பற்றி தவறாக பேசிய அவரை விஜயகாந்த் எதுவுமே செய்யவில்லை என்றாலும், கர்மா சுழற்றி அடித்ததை யாராலும் மறக்க முடியாது.

விஜயகாந்த் உடல்நிலை சரி இல்லாமல் இருந்த அத்தனை வருடமும் வடிவேலு சினிமா வாய்ப்பில்லாமல் வீட்டில் தான் முடங்கி இருந்தார். சமீபத்தில் மாமன்னன் படம் அவருக்கு மிகப்பெரிய பிரேக்காக அமைந்த நேரத்தில், விஜயகாந்தின் மறைவு மீண்டும் வடிவேலுவை வீட்டிற்குள்ளே அடைத்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். அப்படி தான் தற்போது ரஜினியை பற்றி பேசிய பிரபலம் ஒருவர் பெரிய சிக்கலில் சிக்கி இருக்கிறார்.

வடிவேலு போல் சுற்றி அடிக்கும் கர்மா

சமீப காலமாகவே தமிழ் சினிமாவில் ரஜினிக்கு போட்டி விஜய் தான், அதிலும் யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்பது தான் இவர்களுக்கு இடையே இருக்கும் பஞ்சாயத்து என சுற்றி இருப்பவர்கள் கிளப்பி விட்டு விட்டார்கள். அதிலும் ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழாவின் போது ரஜினி சொன்னா காக்கா கழுகு கதை விஜய்க்காகத்தான் என கிளப்பி விட்டு தேவையில்லாத சர்ச்சைகளை ரஜினி மற்றும் விஜய் ரசிகர்களிடையே உண்டு பண்ணி விட்டார்கள்.

Also Read:சைலன்ட் மோடில் இருக்கும் விஜய், சூர்யா.. சொன்னதை நிறைவேற்றிய ரஜினியின் சிஷ்யன்

யார் நினைத்தாலும் யாரை வேண்டுமானாலும் சுலபமாக தாழ்த்தி பேசி விடலாம் என்று இன்றைய காலகட்டம் ஆகிவிட்டது. லியோ படத்தின் விழாவின் போது லோகேஷ் கனகராஜின் நண்பர் மற்றும் வசனகர்த்தா ரத்னா குமார் ஏகபோகத்துக்கும் ரஜினியை மறைமுகமாக தாக்கி இருந்தார். இதன் விளைவு லோகேஷ் கனகராஜ் அடுத்து இயக்க இருக்கும் தலைவர் 171 படத்திலிருந்து ரத்தினகுமார் நீக்கப்பட்டது தான்.

இதைத் தொடர்ந்து அவர் ராகவா லாரன்சை வைத்து ஒரு படம் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. ராகவா லாரன்ஸ் நடிகர் ரஜினியின் தீவிர பக்தன் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். ரஜினி பற்றி தவறாக பேசிவிட்டு, லாரன்ஸ் உடன் பணி புரிவது என்பது கனவிலும் நடக்காது. இதனால் தான் அந்த படத்தில் இருந்து ரத்தினகுமாரை நீக்கி இருக்கிறார்கள்.

ரத்தினகுமாரை இப்போது மொத்தமாக கர்மா வச்சு செய்து இருக்கிறது. அங்க சுத்தி, இங்க சுத்தி எந்த வாய்ப்பும் கிடைக்காமல் நொந்து போயிருக்கிறார் அவர். கடைசியாக சர்தார் 2 படத்திற்கு திரைக்கதை எழுதும் வாய்ப்பு தான் கிடைத்திருக்கிறது. ஒரு சில இடங்களில், மனதிற்கு தோன்றும் விஷயங்களை பேசாமல் அமைதியாக இருப்பதே நமக்கு நல்லது. ரத்தினகுமார் யாரை நம்பி அந்த மேடையில் ரஜினியை பற்றி பேசினார் என்று தெரியவில்லை, ஆனால் மொத்தமாக அவருடைய கேரியருக்கு சூனியம் வைத்துக் கொண்டார்.

Also Read:விஜய் வைத்து பழிக்கு பழி சம்பவம் செய்ய போகும் ரஜினி.. யாருமே எதிர்பார்க்காத அரசியல் ஆட்டம்

Trending News