வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

வளர்த்து விட்டவரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.. விஜய்க்கு மண்டையில் கொட்டுவைத்து புத்திமதி சொன்ன தயாரிப்பாளர்

Actor Vijay: விஜய் இப்போது அரசியலில் இறங்க உள்ளது 100 சதவீதம் உறுதியாகிவிட்டது. அவர் செய்யும் ஒவ்வொரு விஷயங்கள் மூலம் அப்பட்டமாக இந்த விஷயம் தெரிகிறது. முதலில் பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பில் அதிகம் மதிப்பெண் எடுத்த மாணவர்களை தொகுதி வாரியாக பிரித்து பரிசுகள் வழங்கினார்.

இதைத்தொடர்ந்து இரவு பாடசாலை மற்றும் உலக பட்டினி தினத்தில் ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்குவது என பல விஷயங்கள் செய்து வருகிறார். இதற்கு முன் இத்தனை வருடங்கள் செய்யாத தளபதி இப்போது இதை திடீரென செய்து வருவதற்கு அரசியல் நுழைவு தான் காரணம்.

Also Read : ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்.. விஜய், ரஜினியை வைத்து குளிர் காயும் அனிருத்

அதுவும் குறிப்பாக விஜய் ஒவ்வொரு விஷயத்தையும் தொகுதிவாரியாக செய்து வருகிறார். தொகுதி என்றாலே அது அரசியலுக்கு மட்டுமே சொந்தமான வார்த்தை. அரசியலுக்கு வருவது நல்ல விஷயம் என்றாலும் தன்னை வளர்த்து விட்ட வரை சேர்த்துக் கொள்ள வேண்டும் என பிரபல தயாரிப்பாளர் கே ராஜன் யூடியூப் சேனல் ஒன்று இருக்கு பேட்டியளித்துள்ளார்.

ஆரம்பத்தில் விஜய்க்கும், அவரது அப்பாவுக்கும் பிரச்சனை ஏற்பட காரணமாக இருந்த விஷயமே விஜயின் பேச்சை மீறி எஸ்ஏசி அரசியல் கட்சி தொடங்க இருந்ததுதான். இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்போது வரை விஜய் தனது தந்தையுடன் பேசாமல் இருக்கிறார். இது பற்றி தயாரிப்பாளர் கே ராஜன் பல மேடைகளில் பேசியிருக்கிறார்.

Also Read : யாருப்பா அடுத்த சூப்பர் ஸ்டார்.? விஜய்யையும் , எஸ்.ஏ.சி-யையும் வச்சி செய்த ஜெயிலர் பட ஹூக்கும் பாடல்

அதாவது விஜய்யை பெற்றவர், அதோடு மட்டுமல்லாமல் ஆரம்பத்தில் விஜய் வளர்வதற்காக பல படங்களை கொடுத்தவர் அவருடைய தந்தை தான். இப்போது அவர் அரசியலுக்கு வரும்போது எஸ்ஏசியை அருகில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்படி இல்லை என்றால் அது அவரது ரசிகர்கள் மத்தியில் வேறு விதமாக கொண்டு போய் சேர்த்து விடும்.

தளபதியை உதாரணமாக வைத்திருக்கும் அவரது ரசிகர்கள் வளர்ந்த உடன் பெற்றோரை தூக்கி எறிந்து விடலாம் என்ற எண்ணத்தை விஜய் உருவாக்கி விடக்கூடாது. தலைவன் எவ்வழியோ மக்கள் அவ்வழி தான் செல்வார்கள். இதைக் கருத்தில் கொண்ட தனது தந்தையை விஜய் கண்டிப்பாக சேர்த்துக்கொண்ட அரசியலில் பயணிக்க வேண்டும் என்று மண்டையில் கொட்டு வைக்காத குறையாக புத்திமதி சொல்லி இருக்கிறார் ராஜன்.

Also Read : விஜய்க்கு அடுத்து சிவகார்த்திகேயன் தான்.. மொத்த பெயரையும் சல்லி சல்லியா உடைச்சிட்டாங்களே

Trending News