சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

12 வயது பெண்ணுக்கு டார்ச்சர் கொடுத்த பிரபல டிவி ஆங்கர்.. இப்படி ஒரு கொடூரமான சம்பவம்

தொலைக்காட்சிகளில் இப்போது புதுவிதமான நிகழ்ச்சிகள் பல வந்து விட்டது. ஆனால் அப்போதைய காலகட்டத்தில் பாடல், ஆடல் என்று சில நிகழ்ச்சிகள் இருந்து வந்தது. அப்படி பிரபல டிவி சேனலில் பாட்டு பாடும் நிகழ்ச்சி ஒன்று அரங்கேறி வந்தது. அதில் பிரபல தொகுப்பாளர் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.

வெளியில் அவருக்கு மக்கள் மத்தியில் அவ்வளவு வரவேற்பு கிடைத்தது. அதுமட்டுமின்றி தொகுப்பாளராக இருந்த அவர் அதன் பிறகு தயாரிப்பாளராக அவதாரம் எடுத்தார். அதுமட்டுமின்றி தான் பணியாற்றிய சேனலிலேயே முக்கிய பொறுப்பாளராகவும் மாறினார். இப்படி பல திறமைகள் இருந்தாலும் சில வக்ரமான குணமும் அந்த பிரபலம் கொண்டிருந்தார்.

Also Read : வசியம் செய்த ஓமனக்குட்டி, குட்டி போட்ட பூனையாக சுற்றி வரும் ஹீரோ.. வாரிசு வளராம இருந்தா சரிதான்

அந்தச் சமயத்தில் பிரபல நிகழ்ச்சியில் பாட்டு பாடுவதற்காக பல குழந்தைகள் பங்கு பெற்றனர். அதில் பங்குபெற்ற 12 வயது பெண் குழந்தையை தனது அறைக்க அழைத்துச் சென்றுள்ளார். அப்போது என்ன பாடல் பாடப் போகிறாய் என்று கொஞ்சம் கொஞ்சமாக அந்த பெண்ணிடம் பேச தொடங்கியுள்ளார்.

அதன் பின்பு தொகுப்பாளர் சற்று எல்லை மீறி செல்ல சுதாகரித்துக் கொண்ட பெண் அவரிடம் இருந்து ஓட்டம் பிடித்துள்ளார். ஒரு 12 வயது குழந்தை என்று கூட பார்க்காமல் இவ்வாறு அந்த தொகுப்பாளர் செய்தது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. ஆனாலும் அவர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அதுமட்டுமின்றி இந்த விஷயம் அப்போது பல பேருக்கு தெரியாமல் மறைத்து விட்டனர். அதன் பின்பு பல வருடம் கழித்து வேறு ஒரு பாடகி இசையமைப்பாளர் மீது குற்றச்சாட்டு வைக்கும் போது இந்தத் தொகுப்பாளரின் முகத்திரையும் கிழிந்தது. அப்படி இருந்தும் தற்போது வரை சுதந்திரமாகத்தான் அவர் திரிந்து வருகிறார்.

Also Read : அட்ஜஸ்ட்மென்ட் கேட்டு பகிரங்க மிரட்டல் விட்ட நடிகர்.. மறுத்ததால் நடிகைக்கு நேர்ந்த கதி

Trending News