Vaazhai: சமீபத்தில் ரிலீசான தமிழ் படங்களில் ரசிகர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம் தான் வாழை. ஒரு 20 வருடங்களுக்கு முன் தென் தமிழகத்தில் ஒரு சாமானிய மனிதரின் குடும்பம் எப்படி இருந்தது என்பதை கண் முன்னாடி கொண்டு வந்து விட்டார் இயக்குனர் மாரி செல்வராஜ்.
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமனிதன் படங்களுக்கு அடுத்து யதார்த்த கதையை பேசு தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் பெரிய மதிப்பை பெற்றிருக்கிறார். பல கோடி செலவு பண்ணி எடுக்கப்பட்ட விக்ரமின் தங்களான் படத்தை தாண்டி இந்த படம் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.
படம் ரிலீஸ் ஆகி வசூலில் கலை கட்டிக் கொண்டிருக்கும் நேரத்தில் மாரி செல்வராஜின் தலையில் இடியை இறக்கி இருக்கிறார் எழுத்தாளர் சோ. தர்மன். சாகித்திய அகாடமி விருது பெற்ற சிறுகதை எழுத்தாளர்கள் தர்மன். இவர் நேற்று மீடியாவுக்கு பேட்டி ஒன்றை கொடுத்து இருக்கிறார்.
மாரி செல்வராஜுக்கு விழுந்த பெரிய அடி
அதில் தான் பெரும்பாலும் படங்கள் பார்க்கக்கூடிய ஆள் இல்லை. எழுத்தாளர்கள் வட்டாரத்தில் இருந்தவர்கள் தன்னிடம் வாழை படத்தை பார்த்த அறிவுறுத்தியதாக சொல்லி இருக்கிறார். இந்த படத்தை பார்த்த பிறகு தனக்கு பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது, இது என்னுடைய வாழையடி சிறுகதையை அப்படியே எடுத்தது போல் இருக்கிறது.
இவர் வாழை என்று பெயர் வைத்திருக்கிறார். நான் வாழையடி —- என்று பெயர் வைத்தேன். இதற்கு காரணம் வாழையடி வாழையாக இந்த சிறுவர்களுக்கு இதுதான் நடந்து வருகிறது என்பதை உணர்த்துவதற்காக தான். இதில் நான் எழுதிய ஒவ்வொரு வார்த்தைகளும் அப்படியே காட்சியாக மாரி செல்வராஜ் வைத்திருக்கிறார் என பேசி இருக்கிறார்.
படம் ரிலீஸ் ஆன சமயத்தில் மாரி செல்வராஜ் இது தன்னுடைய வாழ்க்கையில் நடந்த கதை என்று சொன்ன பின்னாடி தான் வாழை படத்தின் மீதான எதிர்பார்ப்பு தமிழ் சினிமா ரசிகர்கள் இடையே அதிகரித்தது. அப்படி இருக்கும் பட்சத்தில் இது வேறொருவரின் கதை என செய்தி வெளியாகியிருப்பது கண்டிப்பாக இந்த படத்தை பெரிய அளவில் பாதிக்கும்.
ஏற்கனவே விஷமிகள் பலர் மாரி செல்வராஜை ட்ரோல் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். மேலும் அந்த எழுத்தாளருக்கு காப்பீடு தொகையை கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்த பிரச்சனையை மாரி செல்வராஜ் எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்பது அவர் இதைப் பற்றி வாயை திறந்து பேசினால் தான் தெரியும்.