ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

டோன்ட் டச் மீ, படப்பிடிப்பில் யோகி பாபுக்கு நடந்த அவமானம்.. அஜித்தை வைத்து சம்பவம் செய்த பிஸ்மி

Ajithkumar: அஜித் சும்மா இருந்தாலும் அவரைப் பற்றி வெளிவரும் செய்திகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன. அவர் தமிழ்நாட்டில் இருந்தாலும் சரி, அஜர்பைஜானில் இருந்தாலும் சரி அவரை வம்புக்கு இழுத்து பேசாமல் நாள் ஓடாது என்று தான் சொல்ல வேண்டும்.

அப்படி ஒரு விஷயம் தான் நேற்று நடந்து அஜித் ரசிகர்களை பயங்கர அப்செட் ஆக்கி இருக்கிறது. வலைப்பேச்சு யூடியூப் சேனலில் வரும் பிஸ்மி, அந்தணன், சக்தி ஆகிய மூன்று பேரும் சினிமா சம்பந்தப்பட்ட நிறைய விஷயங்களை சுவாரசியமாக பகிரக் கூடியவர்கள்.

ஒரு சில நேரம் இது மக்களால் பாராட்டப்பட்டாலும் ஒரு சில நேரம் இவர்கள் சொல்வது பொய், கண்டமேனிக்கு அடித்து விடுகிறார்கள் என கடிந்து கொள்வதும் உண்டு. சினிமா விமர்சகர் ஆன ப்ளூ சட்டை மாறனிடம் சினிமா நடிகர்கள் அடிக்கடி மோதுவது உண்டு.

அவர் ரஜினி வரை ஒரு கை பார்த்து விட்டு தான் இருக்கிறார். ஆனால் இதுவரை வலைப்பேச்சு சேனலுக்கு அப்படி ஒரு விஷயம் நடந்தது இல்லை. திடீரென வலைப்பேச்சு சேனலை பற்றி யோகி பாபு பேசிய வீடியோ ஒன்று வைரல் ஆனது.

அஜித் இப்படிபட்டவரா?

உடனே இவர்கள் மூணு பேரும் இணைந்து குழந்தைகள் மீது சத்தியம் பண்ணுகிறோம், கோயிலுக்கு வந்து சத்தியம் பண்ணுகிறோம் நாங்கள் அப்படி கிடையவே கிடையாது என பேசி இருந்தார்கள். இது போதாது என்று யோகி பாபுவின் சினிமா வாழ்க்கையை அசைத்துப் பார்க்கும் அளவுக்கு வேறொரு விஷயத்தை பகிர்ந்து இருக்கிறார்கள்.

ஒரு சில வருடங்களுக்கு முன்பு யோகி பாபு படபிடிப்பு தளத்தில் கலந்து கொண்ட போது பெரிய ஹீரோ ஒருவர் அவரிடம் டோன்ட் டச் மீ, என்னை தொடாதீங்க என்று சொன்னதாக இந்த சேனலில் ஒரு செய்தி வந்தது. அதை மீண்டும் குறிப்பிட்டு அந்த பெரிய நடிகர் அஜித்குமார் தான்.

இந்த விஷயத்தை எங்களிடம் சொன்னதே யோகி பாபு தான் என குட்டையை குழப்பி விட்டிருக்கிறார்கள். ஒரு பக்கம் இவர்கள் சொல்வது பொய் என பல பேர் சொன்னாலும், இன்னொரு பக்கம் என்ன அஜித் இப்படிப்பட்டவரா, படப்பிடிப்பு தளங்களில் தீண்டாமையை பின்பற்றுகிறாரா என பலரும் அப்செட் ஆகி இருக்கிறார்கள்.

இதற்கு யோகி பாபு தன்னிலை விளக்கம் கொடுத்தால் தான் சரியாக இருக்கும். அஜித்தின் நலம் விரும்பிகள் சிலர் யோகி பாபுவின் பழைய பேட்டி வீடியோ ஒன்றையும் வைரல் ஆக்கி வருகிறார்கள். அதில் அஜித் தன்னை படப்பிடிப்பு தளத்தில் பார்த்தபோது கட்டிப்பிடித்து வரவேற்றதாக சொல்லி இருக்கிறார்.

இதில் எந்த வீடியோவை நம்புவது என்று தெரியவில்லை. எது எப்படியோ வலைப்பேச்சு சேனலுக்கு ஆபத்து என வந்துவிட்டால் பிஸ்மி பல ரகசியங்களை வெளியில் எடுத்து விடுவார் என்பது மட்டும் நன்றாக தெரிகிறது.

Trending News