வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ரஜினி பட்ட கஷ்டத்தை கால் தூசி கூட பட்டிருக்க மாட்டாரு.. அவரு சூப்பர் ஸ்டாரா ? கிழித்து தொங்கவிட்ட பிரபலம்

Super Star Rajinikanth: தமிழ் சினிமாவை பொறுத்த வரைக்கும் எம் ஜி ஆர் தொடங்கி இன்றுவரை பல முன்னணி ஹீரோக்களுக்கு சிறப்பு பட்டங்கள் என்று ரசிகர்களாக இருக்கட்டும் அல்லது திரை துறையை சார்ந்தவர்களாக இருக்கட்டும் வைப்பார்கள். ஆனால் சூப்பர் ஸ்டார் என்னும் பட்டத்தை தவிர வேறு எதற்குமே இன்று வரை போட்டி என்று ஒன்று வந்ததே கிடையாது. கடந்த 2000 ஆண்டு தொடங்கி இன்று வரை கோலிவுட்டின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்பதே மிகப்பெரிய விவாதமாக இருக்கிறது.

கோலிவுட் சினிமாவின் அடுத்த மக்கள் திலகம், நடிகர் திலகம், உலக நாயகன், இளைய தளபதி என ஒரு போட்டியே கிடையாது. ஆனால் அடுத்த சூப்பர் ஸ்டார் யார், அடுத்த ரஜினிகாந்த் யார் என பல கேள்விகள் சினிமா பிரபலங்கள் தொடங்கி ரசிகர்களுக்கு வர இருக்கிறது. ரஜினிகாந்த் மற்றும் சூப்பர் ஸ்டார் என்பதை சுற்றியே அடுத்த கட்ட தமிழ் சினிமா இருப்பதைப் போல் காட்டப்படுகிறது.

Also Read:இது டைகரின் கட்டளை.. வெளியானது ஜெயிலர் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி

சமீபத்தில் தளபதி விஜய்யின் வாரிசு பட ரிலீஸ் சமயத்தில் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று ஆளாளுக்கு பேச ஆரம்பித்தார்கள். இது விஜய் ரசிகர்களுக்கும், ரஜினியின் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய சர்ச்சையே வரும் அளவுக்கு ஆனது. இப்போது சிவகார்த்திகேயனின் மாவீரன் ரிலீஸ் சமயத்தில் மீண்டும் இந்த சர்ச்சை கிளம்பி இருக்கிறது.

மாவீரன் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பல பிரபலங்கள் சம்பந்தமே இல்லாமல் சிவகார்த்திகேயன் தான் அடுத்த ரஜினிகாந்த், ஏன் ரஜினியே சிவகார்த்திகேயன் தான் என்பது போல் பேசியிருந்தார்கள். இது ரஜினி ரசிகர்களுக்கு பயங்கர கோபத்தை தூண்டியது. இந்நிலையில் பிரபல யூட்யூபர் ஒருவர் இந்த சர்ச்சைக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.

Also Read:5 கோடி வாங்கியதால் பரிதவிக்கும் லோகேஷ்.. தலைவர் படத்துக்கு வந்த முட்டுக்கட்டை

அவர் பேசியபோது ரஜினிகாந்த் அவ்வளவு எளிதாக சூப்பர் ஸ்டார் என்னும் பட்டத்தை பெற்று விடவில்லை. அதற்காக அவர் பட்ட கஷ்டங்களும், அவமானங்களும் அதிகம். பல வெற்றி படங்களை கொடுத்த பிறகும் கூட ரஜினி ஏசி இல்லாத காரில் தான் பயணித்தார். அவர் ஒரு லட்சம் சம்பளம் வாங்கவே பல ஆண்டுகள் ஆனது. தன்னுடைய கடின உழைப்பால் இந்த இடத்திற்கு அவர் வந்தார்.

அப்படி இருக்கும் பொழுது இன்றைய இளம் ஹீரோக்களை அடுத்த ரஜினி, அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொல்வதெல்லாம் ரொம்பவும் தவறு என்று பேசி இருக்கிறார். சிவகார்த்திகேயன் ரஜினி போல் எளிமையானவர் என்று ஆரம்பித்த பேச்சு தான் ஒவ்வொரு பிரபலங்களும் பேசும்போது அப்படியே மாறி ரஜினியே சிவகார்த்திகேயன் தான் என்று முடிந்து விட்டது. தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகளாக ரஜினிகாந்த் மற்றும் சூப்பர் ஸ்டார் என்ற பெயரின் மீது அதீத ஈர்ப்பு இருப்பதே இதற்கு காரணமாக கருதப்படுகிறது.

Also Read:ஒருவேளை சோறு கூட போடாத ரஜினி.. அவர் கூட விஜய்யை கம்பேர் பண்ணாதீங்க, சர்ச்சையை கிளப்பிய பிரபலம்

Trending News