திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

மும்பையில செட்டில் ஆயிட்டீங்களா என கேட்ட ரசிகர்.. சூர்யா சொன்ன பதில் என்ன தெரியுமா?

Actor Suriya: கங்குவா, சூர்யா 43, வாடிவாசல் என அடுத்தடுத்து பல படங்களை மேற்கொள்ளும் சூர்யா தற்பொழுது படப்பிடிப்பில் பிசியாக இருந்து வருகிறார். இந்நிலையில் என்ன நீங்கள் மும்பையிலே செட்டில் ஆகி விட்டீர்கள் என ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலடி கொடுத்த தகவலை இத்தொகுப்பில் காணலாம்.

எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு ஏற்ற கதாபாத்திரமாகவே மாறி நடிக்கும் வல்லமை கொண்டவர் சூர்யா. விக்ரம் படத்தின் ரோலக்ஸ் என்ட்ரி காட்சிகளுக்குப் பிறகு இவரின் மார்க்கெட் மிகவும் டிமாண்ட் ஆக இருந்து வருகிறது.

Also Read: கோடிகளை கொட்டும் நிறுவனங்கள்.. பா ரஞ்சித்தை நம்பி படையெடுக்கும் தயாரிப்பாளர்கள்

அதைத்தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வரும் இவரின் கங்குவா பட போஸ்டரின், வெறித்தனமான ரோலில் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். இந்நிலையில் சூர்யா அடிக்கடி மும்பைக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டு வருகிறார்.

இதை குறித்து ரசிகர் ஒருவர் அவரிடம் நீங்களும் மும்பையிலே செட்டில் ஆகிவிட்டீர்கள் போல என்ற கேள்வியை முன் வைத்தார். அதற்கு என் பிள்ளைகள் மேற்படிப்பதற்காக மும்பையில் இருந்து வருகிறார்கள் அவர்களை பார்க்க நான் அடிக்கடி செல்வேன்.

Also Read: அறக்கப்பறக்க பாண்டியன் ஸ்டோர்ஸை உருட்டும் இயக்குனர்.. கிரகப்பிரவேத்தில் ஒன்று சேரும் குடும்பம்

பிள்ளைகளை பார்ப்பதற்காக மும்பைக்கு சென்றது ஒரு குத்தமா. அங்கும் இங்கும் அலைந்து கொண்டு தான் இருக்கிறேன் நான் ஒன்றும் மும்பையில் செட்டில் ஆகவில்லை. தற்போது வரைக்கும் சென்னையில் தான் இருந்து வருகிறேன் அதுவும் உங்களிடம் பேசி வருகிறேன் போதுமா என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

மேலும் இது போன்ற தவறான தகவலை யாரும் இனி பரப்ப வேண்டாம் எனவும் தன் வருத்தத்தை வெளிப்படுத்தினார். அதைத் தொடர்ந்து இதற்கான வாய்ப்பு எதுவும் இருந்தால் உங்களுக்கு தெரியாமல் நான் செய்ய மாட்டேன் எனவும் தன் கருத்தை முன் வைத்துள்ளார் சூர்யா.

Also Read: மாஸ் காட்டிய முத்துவேல் பாண்டியன், மொத்தமாய் மண்ணை கவ்விய சிரஞ்சீவி.. ஆந்திராவை அலறவிட்ட சூப்பர் ஸ்டார்

Trending News