வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

சூர்யாவை மிரள வைத்த ரசிகரின் போஸ்டர்.. ஹாலிவுட்டுக்கு டஃப் கொடுக்கும் கங்குவா

Kanguva Fan Made Poster: சூர்யா நடித்து வரும் கங்குவா சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்காக சூர்யா கடும் உழைப்பை கொடுத்து வருகிறார்.

அது மட்டுமின்றி இப்படத்திற்காக சிக்ஸ் பேக் முதல் எடை குறைப்பு வரை கடும் ஒர்க் அவுட் செய்து தன் தோற்றத்தையும் மாற்றியிருந்தார். மேலும் சண்டை காட்சிகளிலும் அவர் கடுமையாக ரிஸ்க் எடுத்து நடித்து வருகிறார்.

Also read: அடுத்த வருடம் சூர்யாவிற்கு வசந்த காலம் தான்.. அஜித், விஜய்க்கு கிடைக்காத யோகம்

சமீபத்தில் கூட ஈவிபி பிலிம் சிட்டியில் இப்படத்தின் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்ட போது சூர்யாவுக்கு ஒரு விபத்து ஏற்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று அறிவித்து ரசிகர்களை அமைதிப்படுத்தினார் சூர்யா.

இப்படி முழு அர்ப்பணிப்போடு நடித்து வரும் சூர்யாவுக்காக அவருடைய ரசிகர்கள் சர்ப்ரைஸ் ஒன்றை தற்போது கொடுத்துள்ளனர். அதாவது படக்குழுவுக்கே ஆட்டம் காட்டும் வகையில் ஃபேன்ஸ் உருவாக்கிய கங்குவா பட போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

Also read: ஈவிபி-யில் சூர்யா காட்டிய பிரம்மாண்டம்.. பாலிவுட் நடிகருக்கே ஆட்டம் காட்டிய கங்குவா டீம்

அதில் சூர்யா ஹாலிவுட் ஹீரோவுக்கு டஃப் கொடுப்பது போன்ற தோற்றத்தில் அசத்தலாக இருக்கிறார். அப்படி பார்த்தால் ஒரிஜினல் போஸ்டரையே மிஞ்சிவிடும் அளவுக்கு இது இருக்கிறது. இதை தற்போது ட்ரண்ட் செய்து வரும் ரசிகர்கள் கங்குவாவின் அடுத்த அப்டேட்டை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ரசிகரின் போஸ்டர்

surya-kanguva
surya-kanguva

Trending News