ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

சூர்யா சனம் ஷெட்டியை விட “குள்ளம்” என கலாய்த்த விஜய் ரசிகர்.. சனம் கொடுத்த தரமான பதிலடி

சூர்யாவின் பிறந்த நாளான இன்று சூர்யாவை வாழ்த்தி பல நடிகர், நடிகைகள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் சூர்யாவின் புதிய படங்களின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் போன்றவை வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது.

அந்த வகையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் சூர்யா 40 படத்திற்கு எதற்கும் துணிந்தவன் என பெயர் வைத்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தீம் மியூசிக் அடங்கிய மோஷன் போஸ்டர் ஆகியவற்றை வெளியிட்டு சூர்யா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது சன் பிக்சர்ஸ்.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நடிகை சனம் ஷெட்டி சூர்யாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

a-fan-who-comment-about-suriyas-height
a-fan-who-comment-about-suriyas-height

அதைப் பார்த்த விஜய் ரசிகர் ஒருவர், சனம் ஷெட்டியை விட சூர்யா குள்ளமாக இருப்பதை சுட்டிக்காட்டினார். இதை கவனித்த சனம் செட்டி உடனடியாக, உயரத்தில் என்ன இருக்கு சகோதரா, அவங்க திறமை தான் பெருசு என குறிப்பிட்டு பதிலடி கொடுத்தார்.

sanam-shetty-reply-to-fan
sanam-shetty-reply-to-fan

இதைப் பார்த்த சூர்யா ரசிகர்கள் தற்போது அந்த ரசிகரின் தலைமுறையினரை தோண்டி எடுத்து காதுகள் கருகும் அளவுக்கு கெட்ட வார்த்தைகளில் திட்டி வருகின்றனர். இந்த பதிவு இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

சனம் செட்டி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பெரிய அளவு பட வாய்ப்புகள் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று. விரைவில் அவரது திறமையை நிரூபிக்கும் அளவுக்கு ஒரு கதாபாத்திரம் மாட்டும் என நம்பலாம்.

Trending News