புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

மகனுக்கு முன்னாடியே 2வது திருமண பத்திரிக்கை அடிக்கும் அப்பன்.. கேடுகெட்ட குடும்பமா இருக்குதே

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் தலைக்கு மேல் வளர்ந்த மூன்று பிள்ளைகள் இருக்கும்போது கோபி, 25 வருடங்களாக கூட வாழ்ந்த மனைவி பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு கல்லூரி காதலில் ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் முடிவுக்கு வந்திருக்கிறார். இனிமேல் எந்த அவமானத்தையும் சந்திக்க முடியாது என ராதிகாவும் கோபியை ஏற்றுக்கொண்டார். இதற்காக அடுத்த முகூர்த்தத்திலேயே திருமணத்தை செய்து கொள்ளவேண்டும் என முடிவிற்கு வரும் கோபி, ராதிகாவின் குடும்பத்தினரின் தடபுடலான ஏற்பாடுகளுடன் புது மாப்பிள்ளையாக தயாராகிறார்.

Also Read: சிங்கப்பெண்ணாக களம் இறங்கிய பாக்யா.. செக் வைத்த முதலாளி

இதையறிந்த ராதிகாவின் மகளும், கோபி அங்கிள் அம்மாவை திருமணம் செய்துகொண்டு இனிமேல் நம்மளுடைய வீட்டிலேயே இருக்க போகிறார் என தலைகால் புரியாமல் சந்தோசத்தில் ஆடுகிறார். ஏற்கனவே கோபியின் இரண்டாவது மகன் எழில், விதவையாக குழந்தையுடன் இருக்கும் அமிர்தாவை காதலித்துக் கொண்டிருக்கும் நிலையில், மகனுக்கு முன்னாடி அப்பன் பத்திரிக்கை அடித்து திருமணத்திற்கு ரெடியாகி இருக்கிறார்.

Also Read: டிஆர்பி-யில் டாப் 5 இடத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட விஜய் டிவி சீரியல்கள்.. அடித்து நொறுக்கும் சன் டிவி

மறுபுறம் பாக்யா, திருமண ஆர்டரை எப்படியாவது எடுத்தாக வேண்டும் என இன்டர்வியூ சென்ற நிலையில், அதில் சிறப்பாக செயல்பட்டு அந்த ஆர்டரை எடுத்திருக்கிறார். இதனால் குடும்பமே பாக்யாவை பெருமையாக நினைக்கும் நிலையில், மாமியார் மட்டும் ‘கோபி இல்லாமல், ஒரு குடும்பத்தின் தலைவனை வெளியேற்றி நீ என்ன பெருசா சாதித்து விடுவாய்!’ என பாக்யாவை வசை பாடுகிறார்.

இருப்பினும் அதையெல்லாம் கண்டுகொள்ளாத பாக்யாவை தன்னுடைய கேட்டரிங் தொழில் மூலம் முன்னேறி, எப்படியாவது வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென போராடுகிறார். இதையெல்லாம் பொருட்படுத்தாத கோபி, ராதிகா திருமணத்திற்கு சம்மதித்ததால் குஷியாகி உள்ளார்.

Also Read: இண்டர்வியூவுக்கு சென்ற பாக்யா.. ஒரே நேரத்தில் இத்தனை ஆடர்ரா!

Trending News