ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

பாண்டியனுக்கும் மகனுக்கும் வெடிக்கப் போகும் சண்டை.. சந்தோஷத்தில் மருமகள், மாட்டிக்கொண்ட மீனா

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், தங்கமயில் நினைத்தபடி சரவணனை கூட்டிட்டு ஹனிமூன் கிளம்பிவிட்டார். இந்நிலையில் மீனா காதலித்து வீட்டின் சம்பந்தத்தோடு இல்லாமல் வந்ததால் ஒரு மருமகளுக்கு கிடைக்க வேண்டிய சின்ன சின்ன சந்தோசங்களும் கிடைக்கவில்லை என்று ஆதங்கப்படுகிறார். ஆனாலும் இதனால் குடும்பத்திற்குள் எந்த பிரச்சனையும் வந்து விடக்கூடாது என்று தவிக்கிறார்.

அந்த வகையில் செந்தில் இடம் இனி நாம் அந்த வீட்டில் என்ன நடந்தாலும் அனுசரித்து தான் போக வேண்டும். அப்பொழுதுதான் அந்த குடும்பம் சந்தோஷமாக இருக்கும், ஒற்றுமையுடன் வாழலாம் என்று ஒரு நல்ல மருமகளுக்கு சிறந்த உதாரணமாக பேசுகிறார். இதை கேட்ட செந்தில், நமக்கு ஏற்ற மனைவி குடும்பத்திற்கு ஏற்ற மருமகளாக மீனா நடந்து கொள்கிறார்.

பொட்டலம் மடிக்க போக சொன்ன பாண்டியன்

அதே மாதிரி மீனா சந்தோஷப்படுற மாதிரி அவருடைய குடும்பத்துடன் பேசி பழகி வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறார். அந்த வகையில் வெறிகொண்ட சிங்கம் போல் செந்தில், கதிரை கூட்டிக்கொண்டு மீனாவின் அப்பா வீட்டிற்கு போகிறார். அங்கே போனதும் உங்களுக்கு என்ன கவர்மெண்ட் மாப்பிள்ளை தான வேணும். நான் என்னுடைய மீனாவுக்காக படித்து கவர்மெண்ட் வேலையை வாங்கிட்டு உங்களுக்கு ஏற்ற மருமகனாக வந்து நிற்பேன்.

அப்பொழுது இதை வீட்டிற்கு நான் மீனாவை கூட்டிட்டு வந்து என்னுடைய சவாலை நிறைவேற்றுவேன் என்று வீர வசனமாக பேசி மீனாவுக்கு ஏற்ற புருஷனாக மீனாவின் அப்பாவிடம் சபதம் போட்டு விட்டார். இதை கதிர் வீடியோ எடுத்து மீனாவிடம் காட்டுகிறார். வீடியோவில் செந்தில் பேசிய ஒவ்வொரு விஷயங்களையும் பார்த்து மீனா கண்ணீர் வடித்து சந்தோஷப்பட்டு கொள்கிறார்.

அந்த வகையில் நிச்சயம் செந்திலுக்கு ஒரு கவர்மெண்ட் வேலை கிடைத்துவிடும். இதற்கு இடையில் பாண்டியனுக்கும் செந்திலுக்கும் பிரச்சனைகள் வரவும் வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் செந்தில் படிக்க வேண்டும் என்று நினைக்கும் பொழுது பாண்டியன் கடையில் வேலை இருக்கிறது என்று சொல்லி ஏகப்பட்ட வேலையை தலையில் கட்டப் போகிறார்.

இதனால் சரியாக படிக்க முடியாமல் தவிக்கும் செந்தில் உச்சகட்ட ஆவேசத்துடன் பாண்டியனிடம் மோத போகிறார். ஏனென்றால் பாண்டியனுக்கு செந்தில் போட்ட சவால் எதுவும் தெரியாது. அந்த வகையில் அவர் படிக்கப் போகிறார் கவர்ன்மென்ட் வேலையில் சேர போகிறார் என்று தெரியாததால் வழக்கம் போல் செந்திலுக்கு அதிகமான வேலையை கொடுத்து விடுவார்.

ஏற்கனவே பாண்டியன் மீது கோபமாக இருக்கும் செந்திலுக்கு இதுதான் சான்ஸ் என்று மொத்த ஆதங்கத்தையும் கொட்டி தீர்க்கும் விதமாக பிரச்சனைகள் பூகம்பமாக வெடிக்க போகிறது. இதை வேடிக்கை நின்னு பார்க்கும் தங்கமயில் மனதிற்குள் சந்தோஷப்பட்டுக் கொள்ளப் போகிறார். இதே மாதிரி தொடர்ந்து பிரச்சினை வந்தால் சரவணன் உடன் தனிக்குடித்தனம் போகிவிடலாம் என்று இன்னொரு பக்கம் சரவணனை தூண்டி விடவும் வாய்ப்பு இருக்கிறது.

ஆனால் என்ன பிரச்சனைகள் வந்தாலும் குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் அப்பொழுதுதான் சந்தோசம் இருக்கும் என்ற நினைப்பில் இருக்கும் மீனா, செந்திலை சமாதானப்படுத்தி குடும்பத்தில் ஒற்றுமையை குறைக்காத அளவிற்கு பார்த்துக் கொள்வார். ஆனால் இதற்கெல்லாம் ஒரு விதத்தில் நாம் தான் காரணம் என்று குற்ற உணர்ச்சியில் மாட்டிக் கொண்டு தவிக்கப் போகிறார். இதையெல்லாம் தொடர்ந்து செந்தில் சொன்ன வாக்கை நிறைவேற்றும் விதமாக கவர்மெண்ட் வேலை கிடைத்து விட்டால் பாண்டியன் இடமிருந்து சுதந்திரமாக வாழ முடியும்.

பாண்டியன் ஸ்டோர்ஸில் நடந்த சம்பவங்கள்

Trending News