செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

விஜயகாந்தின் சூப்பர் ஹிட் படத்தின் 2ம் பாகம் ரெடி.. மீண்டும் திரையில் கேப்டன்

Captain Vijayakanth: கேப்டன் விஜயகாந்த் பற்றி மக்களுக்கு முழுதாக தெரிவதற்கு முன்னாலேயே அவரை ரசிக்க ஆரம்பித்தது அவருடைய நடிப்புக்காகத்தான். எந்த ஒரு ஒப்பனையும் இல்லாமல், உணர்ச்சி பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் சினிமா ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்டார். தன்னுடைய வாழ்நாளில் விஜயகாந்த் இதுவரைக்கும் 157 படங்களில் நடித்திருக்கிறார்.

நினைவே ஒரு சங்கீதம், வைதேகி காத்திருந்தாள் போன்ற படங்களில் காதலில் உருகியதாக இருக்கட்டும், சத்ரியன் மற்றும் கேப்டன் பிரபாகரன் போன்ற படங்களில் ஆக்சன் ஹீரோவாக மிரட்டியதாக இருக்கட்டும் கேப்டனின் நடிப்பு இன்று வரை தனித்துவமான நடிப்புதான். இரண்டு பக்க வசனமாக இருந்தாலும் ஒரே டேக்கில் அசால்ட் ஆக நடிக்க கூடிய கலைஞர்.

கேப்டன் விஜயகாந்த் அரசியலுக்கு வந்த பிறகு படிப்படியாக நடிப்பதை நிறுத்திக் கொண்டார். 2010 ஆம் ஆண்டு விருதகிரி படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். அத்தோடு 2015 ஆம் ஆண்டு அவருடைய மகன் சண்முக பாண்டியன் ஹீரோவாக நடித்த சகாப்தம் படத்தில் கேமியோ ரோலில் நடித்தார். அதன் பின்னர் விஜயகாந்த்தை வெள்ளி திரையில் யாருமே பார்க்கவில்லை என்பது வருத்தமான விஷயம் தான்.

Also Read:அஜித்துக்கு தொடர்ந்து முட்டு கொடுக்கும் கும்பல்.. இறப்பில் கூட இப்படி ஒரு விளம்பரமா?

கேப்டன் விஜயகாந்தை ஒரு நடிகராக திரையில் பார்க்க ஏங்கிக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு இயக்குனர் ஆபாவாணன் நல்ல செய்தியை கொடுத்திருக்கிறார். திரைப்படக் கல்லூரியில் இருந்து சினிமாவுக்கு வந்த ஆபாவாணனை நம்பி விஜயகாந்த் படம் நடித்துக் கொடுத்தார். அது மட்டும் இல்லாமல் திரைப்பட கல்லூரியில் இருந்து வெளிவந்த எத்தனையோ பேருக்கு சினிமாவில் வாய்ப்பு கொடுத்தார்.

சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம்

அதற்கு நன்றி செலுத்தும் விதமாக ஆபாவாணன் கேப்டனின் வெற்றிப்படமான ஊமை விழிகள் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருக்கிறார். இந்த படத்தில் தீனதயாளன் என்னும் போலீஸ் கேரக்டரில் விஜயகாந்த் நடித்திருப்பார். இந்த கேரக்டரை மீண்டும் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இரண்டாம் பாகத்தில் கொண்டுவர இருக்கிறார்கள்.

விஜயகாந்தை உயிருடன் இருக்கும்போது திரையில் பார்க்க முடியாவிட்டாலும் இப்படியாவது பார்த்து மனதை தேற்றிக் கொள்ளலாம் என அவருடைய ரசிகர்கள் இந்த படத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விஜயகாந்த் படம் வெளியில் வந்து நல்ல ரெஸ்பான்ஸ் பெற்றால், அதை தொடர்ந்து நிறைய மறைந்த நடிகர்களின் படங்களை திரையில் பார்க்கலாம்.

Also Read:நா இல்லாம, என் பெயர் இல்லாம, நீ ஜெயிச்சுக்கோ! கடைசி வரை நிறைவேறாத விஜயகாந்தின் ஆசை

Trending News