வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

குட் பேட் அக்லிக்கு போட்டியாக இறங்கிய படம்.. பொங்கல் ரேஸில் களமிறங்கும் மாஸ் படங்கள்

Ajith : தீபாவளி பண்டிகைக்கு அமரன் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக பொங்கல் பண்டிகையை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஏனென்றால் அப்போது கண்டிப்பாக பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளியாகும்.

அந்த வகையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் குட் பேட் அக்லி படம் வெளியாக இருக்கிறது. துணிவுக்குப் பிறகு இரண்டு வருடங்களாக அஜித் படத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள் இந்த படத்தை பெரிதும் நம்பி இருக்கின்றனர்.

அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு வருகின்ற பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி குட் பேட் அக்லி திரைக்கு வர இருக்கிறது. இதனால் மைத்ரி மூவி மேக்கர்ஸ் உலகம் முழுவதும் உள்ள அனைத்து பங்குதாரர்களுக்கும் திரையரங்குகளை முன்பதிவு செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளது.

குட் பேட் அக்லி படத்துடன் மோதும் படம்

இந்நிலையில் இந்த படத்திற்கு போட்டியாக அருண் விஜய்யின் வணங்கான் படமும் பொங்கல் ரேசில் களம் இறங்குகிறது. பாலா இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் ஆரம்பத்தில் சூர்யா நடித்த நிலையில் சில காரணங்களினால் இந்த படத்தில் இருந்து வெளியேறினார்.

அதன் பிறகு அருண் விஜய் இந்த படத்திற்குள் வந்த பிறகு எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாக இருக்கிறது. பாலாவே இப்படத்தை சொந்தமாக தயாரிக்கும் நிலையில் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித் படத்துடன் வணங்கான் படத்தை வெளியிட முடிவெடுத்திருக்கிறார்கள்.

இது மிகவும் துணிச்சலான முடிவு தான். பாலா வணங்கான் மீது உள்ள நம்பிக்கையால் குட் பேட் அக்லி படத்துடன் போட்டி போட இருக்கிறார். மேலும் இந்த பொங்கல் ரேசில் இன்னும் எந்தெந்த படங்கள் பங்கு பெறுகிறது என்பது இன்னும் சில நாட்களில் தெரியவரும்.

Trending News