வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

கோட்க்கு சரியான பாடம் புகட்டிய படக்குழு.. கேப்டனுக்கு உண்மையான விசுவாசத்தை காட்டிய இயக்குனர்

Goat : விஜய் மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான கோட் படம் சமீபத்தில் வெளியாகி வசூலில் நல்ல லாபம் பார்த்தது. இந்த படத்தில் ஏஐ டெக்னாலஜி மூலம் கேப்டன் விஜயகாந்தை காண்பித்திருந்தனர். ஆரம்பத்தில் விஜயகாந்த் படங்களில் சிறு கதாபாத்திரத்தில் விஜய் நடித்திருப்பார்.

அதற்கான விசுவாசத்தை காட்ட வேண்டும் என்பதற்காக வெங்கட் பிரபு இந்த படத்தில் கேப்டனை நினைவு கூறும்படி காட்சிப்படுத்திருந்தார். இதுவே படத்திற்கு ப்ரமோஷன் ஆகவும் படக்குழு யுக்தியை கையாண்டது. ஆனால் படம் வெளியான பிறகு பெரிய அளவில் விஜயகாந்தின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் எடுபடவில்லை.

வெறும் பிசினஸுகாக மட்டுமே கேப்டனை பயன்படுத்தி உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. ஆனால் கோட்டுக்கு சரியான பாடம் புகட்டும் படி விஜயகாந்தின் விசுவாசத்தை காட்டி இருக்கிறது லப்பர் பந்து படம். அட்டகத்தி தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் இந்த படத்திற்கு ஏகபோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

விஜயகாந்துக்கு சரியான விசுவாசத்தை காட்டிய படம்

கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. லப்பர் பந்து படத்தின் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து தீவிர விஜயகாந்த் ரசிகர். அவர் இப்படத்தின் கதையை தினேஷிடம் சொன்னவுடன் உடனே அவரும் சம்மதித்து விட்டாராம்.

ஏனென்றால் தன்னை போல தினேஷும் ஒரு விஜயகாந்த் ரசிகர். இதில் அவரது கதாபாத்திரம் ஒரு மாமனாராக மட்டுமே போக வேண்டிய சூழலில் இன்னைக்கு ரசிகர்கள் கொண்டாடும் அளவுக்கு மாற்றி உள்ளது. அப்படி தன்னுடைய எழுத்துக்கு தினேஷ் உயிர் கொடுத்ததாக கூறியிருந்தார்.

மேலும் தினேஷின் கேரக்டரை காட்சிப்படுத்தும் போது விஜயகாந்தின் படத்தில் இடம்பெற்ற நீ பொட்டு வெச்ச தங்க குடம் என்ற பாடலை இடம்பெறச் செய்தோம் என்ற இயக்குனர் கூறியிருந்தார். அந்த பாடல் தியேட்டரில் ஒலிக்கும் போது அரங்கமே ஆர்ப்பரித்து.

வெற்றி நடை போடும் லப்பர் பந்து

Trending News