வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

படுக்கைக்கு அழைத்த பிரபல ஹீரோவின் தந்தை.. பிக் பாஸில் மறைத்த சீக்ரெட், பெயரோடு போட்டுடைத்த விசித்ராவின் தோழி

Actress Vichitra Friend: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிகள் போட்டியாளர்கள் தங்களது வாழ்க்கையில் ஏற்பட்ட பூகம்பம் எது என்பதை வெளிப்படையாக சொல்லும் டாஸ்க் நடந்தது. அதில் விசித்ரா தெலுங்கு படத்தில் நடித்த போது அந்தப் படத்தின் டாப் ஹீரோ தன்னை படுக்கைக்கு அழைத்ததாக கூறினார். அந்த நடிகர் பாலகிருஷ்ணா தான் என உறுதியாக கூறி வருகின்றனர்.

விசித்ராவின் நெருங்கிய தோழியும் அவருடன் நிறைய படங்களில் இணைந்து நடித்த கிளாமர் குயின் ஷகிலா, பிக் பாஸ் வீட்டில் உண்மையை சொன்ன விசித்ரா ஏன் பெயரை மட்டும் சொல்லாமல் மறைத்துவிட்டார், இதெல்லாம் விஜய் டிவியின் பிளான். இவ்வளவு நாள் விசித்ரா எங்க இருந்தாங்கன்னு தெரியல, இப்ப திடீரென விஜய் டிவில வராங்க. இவருக்கு சினிமா சான்ஸ் கிடைக்கும் தான் இதெல்லாம் செய்கிறார் என்று டவுட் வருதுன்னு ஷகிலா தன்னுடைய தோழியவே விமர்சிக்கிறார்.

ஆனால் நான் அப்படி இல்லை, எனக்கு நிறையவே நடந்திருக்கிறது. பிரபல தெலுங்கு நடிகர் அல்லரி நரேஷின் அப்பா இயக்குனர் சத்திய நாராயணா இயக்கிய படத்தில் நடிப்பதற்காக ஷகிலாவை கமிட்டனர். ஆனால் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்றால் என்னோட பெட்ரூமுக்கு வரவேண்டும் என்று ஓபன் ஆகவே இயக்குனர் சத்திய நாராயணா ஷகிலாவிடம் கேட்டிருக்கிறார்.

Also read: புளுகுமூட்டை! மண்ட மேல இருக்க கொண்டையை மறந்த வனிதா.. ஆதாரத்துடன் வச்சு செய்யும் பிரதீப் ஆர்மி

அட்ஜஸ்ட்மெண்ட்-க்கு அழைத்த பிரபல ஹீரோவின் அப்பா

படத்திற்கான சம்பளத்தை வாங்கி விட்டேன், அது மட்டுமல்ல இந்த படத்தில் இனிமேல் நடிக்கவும் எனக்கு இன்ட்ரஸ்ட் இல்லை, அட்ஜஸ்ட்மென்ட் செய்து இந்த பட வாய்ப்பு பெற வேண்டிய அவசியமும் இல்லை. எதுக்கு என்னை இப்படி கூப்பிட்டீர்கள் என்று ஷகிலா அவரிடம் கேட்டிருக்கிறார்.

ஏனென்றால் நான் அந்த மாதிரி பண்ணதே கிடையாது, எனக்கு அதுக்கு அவசியமும் வந்ததில்லை என்று ஷகிலா சமீபத்திய பேட்டியில் பிரபல நடிகர்களின் அப்பாவும் இயக்குநருமான சத்திய நாராயணாவை பற்றி மொத்தத்தையும் போட்டுடைத்தார். ஆனால் இயக்குனர் சத்திய நாராயணா இப்போது உயிருடன் இல்லை, இறந்துவிட்டார்.

இருப்பினும் ஷகிலா சொன்னதை குறித்து மொத்த திரையுலகமும் திரண்டு வந்து அவரிடம் கேள்வி கேட்டால், ‘ஆமாம் அவர் என்னை படுக்கைக்கு கூப்பிட்டார்’ என்று தைரியமாக சொல்வேன் என்றும் துணிச்சலுடன் பேசினார்.  ‘என்னுடைய பெயர் மீடியாவுல வரணும், சினிமாவில் சான்ஸ் கிடைக்கும் என நான் பொய்யெல்லாம் சொல்ல மாட்டேன். உண்மையை மட்டும் தான் பேசுவேன்’ என்று விசித்ராவை ஷகிலா தாக்கி பேசி இருக்கிறார்.

Also read: நான் வச்ச குறி எப்போதுமே தப்பாது.. அர்ச்சனா விற்கு அதே ஃபார்முலாவை யூஸ் பண்ணும் காமெடி பீஸ்

Trending News