Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், முத்துக்கு தொலைந்துபோன போன் திரும்ப கிடைத்துவிட்டது. ஆனால் இந்த போன் எப்படி தொலைந்து போச்சு, யாரு சத்யாவின் வீடியோவை சோசியல் மீடியாவில் வெளியிட்டது என்பதை கண்டுபிடிக்கும் விதமாக முத்து மற்றும் மீனா பேசிக் கொள்கிறார்கள். அப்பொழுது செருப்பு தைக்கும் தாத்தா சொன்னது முத்துவுக்கு ஞாபகம் வந்துவிட்டது.
அதாவது ஒரு பொண்ணு தான் செருப்பு தைக்க வரும் பொழுது இந்த போனை விட்டுட்டு போனதாக சொல்லி இருந்தார். ஏன் அந்த பொண்ணு பார்லர் அம்மாவாக இருக்கக் கூடாது, இல்லையென்றால் பார்லர் அம்மாவின் தோழி வித்யாவாக கூட இருக்கலாம் என்று கிட்டத்தட்ட உண்மையை முத்து கண்டுபிடித்து விட்டார். அதன்படி மீனாவிடம் வித்யாவின் போட்டோ இருக்கிறதா என்று கேட்டு வாங்கிக் கொண்டார்.
உடனே அந்த போட்டோவை தாத்தாவின் பேரனுக்கு முத்து அனுப்பி வைத்து இந்த பொண்ணு தான் அந்த போனை தவற விட்டுதா என்பதை கேட்டு சொல்லுங்க என கூறிவிட்டார். பிறகு அந்த தாத்தாவின் பேரனும் முத்துவுக்கு போன் பண்ணி இந்த பொண்ணு தான் போனை தவற விட்டிருக்கிறது என்று தாத்தா சொன்னதாக முத்துவிடம் சொல்லிவிட்டார்.
அடுத்த நிமிஷமே முத்து, வித்யாவின் வீட்டிற்கு போய்விடுகிறார். போனதும் முத்துவின் தொலைந்த ஃபோனை வித்தியாவிடம் காட்டிவிட்டு கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார். முத்து, நம் மீது தான் சந்தேகப்படுகிறார் என்பதை புரிந்து கொண்ட வித்தியா எப்படியாவது பேசி சமாளித்து விட வேண்டும் என்று முயற்சி எடுக்கிறார். ஆனால் முத்துவுக்கு வித்தியா தான் போனை தவற விட்டு இருக்கிறார் என்பது தெரிந்து விட்டதால் தொடர்ந்து கேள்வி கேட்கிறார்.
பிறகு வேறு வழியில்லாமல் வித்யா, ஆமா நான் தான் அந்த போனை அங்க தவற விட்டு விட்டேன். அதே மாதிரி ரோகிணி தான் அந்த போனை எடுத்து வீடியோவை வெளியிட்டார் என்ற ரகசியத்தை போட்டு உடைத்து விடுவார். ஆனால் மற்ற எந்த விஷயத்தையும் சொல்லாமல் மீனாவையும் உங்களையும் பழிவாங்க வேண்டும் என்பதற்காக தான் ரோகிணி அப்படி பண்ணினார் என்பதை சொல்லி விடுவார்.
சும்மாவே முத்து ருத்ரம் தாண்டவம் ஆடுவார், இப்பொழுது இப்படி ஒரு விஷயம் தொக்காக மாட்டி இருக்கிறது என்றால் ரோகிணியை விட்டு வைப்பாரா? இனிமேல் தான் கச்சேரி ஆரம்பம் என்பதற்கு ஏற்ப வித்தியா, ஓவராக ஆட்டம் போட்ட ரோகிணிக்கு ஆப்பு வைக்கும் விதமாக முத்துவிடம் உண்மை சொல்லிவிட்டார். அந்த வகையில் மொத்த கோபத்தையும் முத்து, ரோகிணி மீது காட்டப் போகிறார்.
அதோட விடாமல் அடுத்த அடுத்த ரகசியத்தையும் கண்டுபிடிக்கும் விதமாக முத்து ஒவ்வொன்றாக குடும்பத்தின் முன் வெளிக்காட்டி மொத்தமாக கல்யாணியின் வாழ்க்கையை வெளி கொண்டு வந்து ரோகிணியின் ஆட்டத்தை வெளிச்சம் போட்டு காட்டி விடுவார்.