வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

காவாலாயாவுக்கு எவ்வளவு கொடுத்தாலும் பத்தாது.. அனிருத்தை திக்குமுக்காட செய்த கலாநிதி

Anirudh: இளம் இசையமைப்பாளரான அனிருத் தொடர்ந்து பெரிய நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்திற்கு இசையமைத்திருந்தார். நெல்சனின் எல்லா படங்களிலும் அனிருத் தான் இசையமைத்து வருகிறார்.

அந்த வகையில் ஜெயிலர் படத்தின் முதல் சிங்கிளான காவாலாயா பாடல் வெளியான போது பட்டி தொட்டி எல்லாம் பட்டையை கிளப்பியது. அதிலும் தமன்னா இந்தப் பாடலுக்கு அருமையாக நடனம் ஆடி அசத்தி இருந்தார். இந்த சூழலில் ஜெயிலர் படம் இதுவரை தமிழ் சினிமாவில் இல்லாத அளவுக்கு வசூலை வாரி குவித்து வந்தது.

Also Read : 25 நாட்கள் தாண்டியும் வசூலை வாரி குவிக்கும் ஜெயிலர்.. ஓடிடி ரிலீஸ் நெருங்கினாலும் குறையாத கலெக்ஷன்

இதனால் ஜெயிலர் படத்தின் தயாரிப்பாளரான சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் ரஜினி மற்றும் நெல்சன் ஆகியோருக்கு பரிசுகளை வாரி வழங்கி இருந்தார். காசோலை மற்றும் கார் ஆகியவற்றை பரிசாக கொடுத்திருந்தார். இதில் இசையமைப்பாளர் அனிருத்துக்கு மட்டும் எதுவுமே கொடுக்கவில்லை என்ற ஒரு பேச்சு போய்க் கொண்டிருந்தது.

அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கலாநிதி மாறன் அனிருத்துக்கும் காசோலை மற்றும் கார் கொடுத்திருக்கிறார். அந்த வகையில் ரஜினிக்கு இரண்டு கார்கள் மற்றும் நெல்சனுக்கு நான்கு கார்களை ஆப்ஷனாக கொடுத்திருந்தார். இப்போது அனிருத்துக்கு மூன்று கார்களை ஆப்ஷனாக கலாநிதி கொடுத்திருந்தார்.

Also Read : ஜெயிலர் வேகத்தை குறைத்த குஷி.. முதல் நாள் கலெக்ஷன் ரிப்போர்ட்

இந்த சூழலில் அனிருத்துக்கு ஃபெராரி, போர்ஷே மற்றும் பிஎம்டபிள்யூ ஆகிய கார்களை ஆப்ஷனலாக கொடுத்திருந்தனர். இதில் அனிருத், நெல்சன் போலவே ஒன்றரை கோடி மதிப்புள்ள போர்ஷே காரை தேர்ந்தெடுத்திருந்தார். இவ்வாறு ஜெயிலர் படக்குழுவை கலாநிதி மாறன் திக்குமுக்காட செய்து வருகிறார்.

அதோடு மட்டுமல்லாமல் காவாலா பாட்டுக்கு இன்னும் எவ்வளவு கொடுத்தாலும் பத்தாது என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். அந்த அளவுக்கு ஜெயிலர் படத்திற்கு ஒரு வைபை அனிருத் உருவாக்கி இருந்தார். மேலும் தொடர்ந்து அனிருத் இசையமைத்த லியோ போன்ற படங்கள் அடுத்தடுத்து வரிசையாக வெளியாக இருக்கிறது.

அனிருத்தை திக்குமுக்காட செய்த கலாநிதி

anirudh-kalanithi
anirudh-kalanithi

Also Read : ஜெயிலர் வெற்றிக்கு காரணமான 2 நடிகர்கள்.. பேராசையில் தலைவர் 170-க்கு கண்டிஷன் போட்ட சூப்பர் ஸ்டார்

Trending News