சனிக்கிழமை, நவம்பர் 16, 2024

வேட்டையன் ரிலீஸ் ஆன தியேட்டரில் காக்காவை தொங்கவிட்ட சம்பவம்.. ரொம்ப ஓவரா போறீங்க பாஸ்!

Vettaiyan: ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்னு சொல்லுவாங்க. தமிழ் சினிமாவின் மொத்த வியாபாரமும் இதை நம்பித்தான் இருக்கிறது. நமக்கு புடிச்ச ஹீரோ யாரு, அவருக்கு போட்டி யாரு, அந்த ஹீரோவை விட நம்ம ஹீரோவின் பட கலெக்ஷன் அதிகமா இருக்கணும் இதுதான் தமிழ் சினிமாவை இயங்க வைத்துக் கொண்டிருக்கிறது.

ரஜினி மற்றும் கமல் சமகாலத்து போட்டியாளர்களாக இருந்தவர்கள். அதேபோன்றுதான் விஜய் மற்றும் அஜித் நிலைமையும். அப்படி இருக்கும் பட்சத்தில் திடீரென ஒரு சில வருடங்களாக ரஜினிக்கு விஜய் போட்டி என்பது போல் உருவாக்கப்பட்டு விட்டது.

விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று ஒரு பக்கமும், சூப்பர் ஸ்டார்னா அது ஒருத்தர் தான் அதுவும் ரஜினி தான் என்று இன்னொரு பக்கமும் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனாலேயே என்னவோ சமீப காலமாக வெளிவரும் ரஜினி படங்களில் தலைவரே அவர் வாயை திறந்து நான் தான் சூப்பர் ஸ்டார் என்று பாட்டு பாடும் நிலைமைக்கு ஆகிவிட்டது.

ரொம்ப ஓவரா போறீங்க பாஸ்!

ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழாவின் போது ரஜினி எனக்கு நான்தான் போட்டி, நான் பேசுவதை விஜயை பற்றி தான் பேசுகிறேன் என எழுதி விடாதீர்கள் என சொல்லி இருந்தார். அது மட்டும் இல்லாமல் அப்போது ரஜினி காக்கா- கழுகு கதை ஒன்றை சொல்லி இருந்தார்.

உடனே ஒரு கூட்டம் ரஜினி, தளபதியை தான் காக்கா என்று சொல்கிறார் என பற்ற வைத்து விட்டது. போதாத குறைக்கு லியோ வெற்றி விழாவின் போது விஜய் கழுகு என்று சொல்லிவிட்டு நமட்டு சிரிப்பு ஒன்று சிரிப்பார். அதே நேரத்தில் இயக்குனர் ரத்னவேல் என்னதான் கழுகு மலை மேல பறந்தாலும் இரை தேடுவதற்கு கீழே வந்து தான் ஆகணும்னு பேசி பெரிய சர்ச்சையை கிளப்பினார்.

இது விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜுக்கு கூட அதிருப்தியை தான் கொடுத்திருந்தது. அது மட்டும் இல்லாமல் விஜய் எதுக்கு சோஷியல் மீடியாவுல இவ்வளவு கோபத்தை காட்டுறீங்க என தன்னுடைய ரசிகர்களிடம் நேரடியாகவே கேட்டுவிட்டார்.

ரஜினியும் விஜயும் மாற்றி மாற்றி அறிவுரை சொன்னாலும் அவர்களுடைய விழுதுகள் அதை ஏற்றுக் கொள்வதாய் இல்லை. வேட்டையன் படம் ரிலீஸ் ஆவதற்கு ஒரு நாளைக்கு முன்பே வேட்டையன் டிசாஸ்டர் என்ற ஹாஷ்டாகை உருவாக்கி விட்டார்கள்.

ஒரு கட்டத்தில் நேற்றைய தினம் எல்லாம் வேட்டையன் என்னும் வார்த்தையை விட இந்த வார்த்தை பெரிய அளவில் இரண்டாக ஆரம்பித்தது. ரஜினி என்பதை தாண்டி இந்த படம் பல பேருடைய உழைப்பு என்பதை உணர்ந்துதான் எல்லோரும் செயல்பட வேண்டும்.

போதாத குறைக்க நேற்று வேட்டையன் படம் ரிலீஸ் ஆன ரோகிணி தியேட்டரில் காக்காவை கட்டி தொங்க விட்டிருக்கிறார்கள். இது விஜய்யை விரும்புவர்களுக்கு ஒரு வித வெறுப்பையும், கஷ்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Vettaiyan
Vettaiyan

இதனால் சோசியல் மீடியாவில் ரஜினியை பற்றிய தேவையில்லாத கருத்துக்களை பரப்ப ஆரம்பித்திருக்கிறார்கள். போட்டி என்பது ஆரோக்கியமாக இருக்கும் வரைக்கும் தான் எல்லாமே சரியாக இருக்கும். அதை தாண்டி வார்த்தைகளும், செயல்களும் எல்லை மீறும் போது சம்மந்த பட்ட நடிகர்களே தனக்காக சண்டை போடுபவர்களை வெறுக்கும் நிலை வந்துவிடும்.

- Advertisement -spot_img

Trending News