வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

என்னடா நடக்குது இங்க.. எரிகிற தீயில் பெட்ரோலை ஊற்றும் நபர்.. என்ன சிம்ரன் இதெல்லாம்?

நடிகை ஐஸ்வர்யா ராய், பாலிவுட்டில் மாபெரும் நடிகையாக திகழ்ந்து வருகிறார். அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமண வாழ்க்கை சுமார் 15 வருடங்களுக்கு மேல் அமைதியாக சென்று கொண்டிருந்த நிலையில், சமீப காலமாக ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சன் தம்பதி விவாகரத்து பெற உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.

இதில் வேறொரு நடிகைக்கும் தொடர்பு உள்ளது என்றே கூறலாம். நிலமை இப்படி இருக்க, புது பஞ்சாயத்து ஒன்று ஆரம்பித்து உள்ளது. சமீபத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதை பார்த்த நெட்டிசன்கள் எல்லோரும், “என்ன சிம்ரன் இதெல்லாம்” என்று கெட்டவண்ணமாக உள்ளனர். மறுபுறம், இதெல்லாம் எப்போவும் நடக்கும் விஷயம் தான். பணத்திற்காக ஏதாவது இப்படி நாடகம் போடுவார்கள் என்ற கமெண்ட்டுகளும் வருகின்றன.

கல்யாணத்துக்கு முன்னாடியே பிறந்துட்டேன்..

சமீபத்தில் வைரலான அந்த வீடியோவில், ஒரு இளைஞர் ஐஸ்வர்யா ராய் பற்றி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் அந்த நபர் கூறியதாவது, “என் பெயர் சங்கீத் குமார். ஐஸ்வர்யாராய் 15 வயதாக இருந்த போது நான் பிறந்தேன். லண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஐஸ்வர்யா ராய் என்னை IVF முறையில் பெற்றெடுத்தார்.

“பின் அவரது பெற்றோர் என்னை விசாகப்பட்டினத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் தான் என்னை வளர்த்தனர். அப்போது, நான் பிறந்ததற்கான ஆதாரங்களை அவர்கள் மொத்தமாக அழித்துவிட்டனர், இப்போது என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை” என்று கூறினார்.

இதை தொடர்ந்து உண்மை கண்டறியும் விதமாக இந்த விடியோவை நெட்டிசன்கள் ஆராய்ச்சி செய்து வந்தனர். அப்போது தான், இந்த வீடியோ 4 ஆண்டுகளுக்கு முன் எடுத்த ஒன்று என்றும், வீடியோவில் பேசிய நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது.

இது உண்மையா இல்லையா என்று தெரிவதற்க்குள்ளையே வாய்க்கு வந்த படி பேச ஆரம்பித்துவிட்டார்கள் இந்த நெட்டிசன்கள். மேலும் ஏற்கனவே விவாகரத்து பிரச்சனை ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் பெட்ரோலை ஊற்றும் விதமாக இந்த விடியோவை வேறு நிறைய பேர் ஷேர் செய்து வருகின்றனர்.

Trending News