பொதுவாக படத்தில் நடிக்கும் கதாநாயகிகளுக்கு அட்ஜஸ்மென்ட் என்ற பெயரில் ஆஃபர்கள் கொடுக்கப்படும். அதாவது இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் ஆகியோரிடம் அட்ஜஸ்மென்ட் செய்தால் தான் படத்தில் வாய்ப்பு என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
சில நடிகைகள் இதை ஏற்றுக்கொண்டு படங்களில் நடிக்கிறார்கள். ஆனால் பல நடிகைகள் இதற்கு விருப்பம் தெரிவிக்காத காரணத்தினால் படங்களில் இருந்து நீக்கப்பட்ட சம்பவங்களும் அரங்கேறி இருக்கிறது. இந்நிலையில் காமெடி நடிகர் ஒருவரால் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனையை நடிகை சந்தித்திருக்கிறார்.
அதாவது ஆரம்பத்தில் கஷ்டப்பட்டு வாய்ப்பு வாங்கிய காமெடி நடிகர் ஒருவர் அதன் பின்பு நல்ல நிலைமைக்கு வந்து விட்டார். அவர் படத்தில் நடித்து செம ஹிட் ஆகும் என்ற நிலைமை இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு வந்து விட்டது. காமெடி நடிகராக இருந்தாலும் அவர் கேட்கும் கதாநாயகியை தான் ஜோடியாக போட்டு வந்தனர்.
Also Read : மனைவி சொல்ற நடிகையுடன் நடிக்கும் மாஸ் ஹீரோ.. நம்பர் நடிகையுடன் நடந்த அந்தரங்க லீலை
மேலும் பெண்கள் விஷயத்தில் செம வீக்கான அவர் நடிகை ஒருவரை ஜாடை மாடையாக அட்ஜஸ்மெண்டுக்கு அழைத்திருக்கிறார். ஆனால் நடிகை இது மாதிரி விஷயங்களில் விருப்பம் இல்லாததால் நேரடியாகவே மறுத்துவிட்டார். உடனே காமெடி நடிகர் இந்த படத்திலிருந்து நடிகையை தூக்க பல முயற்சிகள் செய்தார்.
ஆனால் படப்பிடிப்பு பாதி சென்று விட்டதால் அவரால் நடிகையை நிராகரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனாலும் நரக வேதனையை நடிகை அனுபவிக்கும் படி படப்பிடிப்பில் பல சம்பவங்களை காமெடி நடிகர் அரங்கேற்றி இருந்தாராம். இதனால் பாதியில் இருந்தே நடிகை படத்தில் இருந்து தெறித்து ஓடிவிட்டாராம்.