வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

மணிரத்தினம் கூப்பிட்டதால் கவர்மெண்ட் வேலையை ரிசைன் செய்த ஹீரோ.. ஜெயித்ததால் மிஞ்சியது கௌரவம்

மணிரத்தினம் இயக்கத்தில் கடந்தாண்டு மிகப் பிரம்மாண்டமான வரலாற்று மிக்க திரைப்படமாக பொன்னியின் செல்வன் வெளிவந்தது. இப்படம் ரசிகர்கள் மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்களும் பார்த்து வியந்து அதிக அளவில் பாராட்டுகளை பெற்ற படமாகும். அந்த அளவிற்கு கதையை வரலாற்றுக் கதையை படமாக கொடுத்தார்.

இப்படிப்பட்ட இவர் ஆரம்பத்தில் காதல், ரொமான்ஸ் போன்ற படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இளைஞர்களை கவரக்கூடியவர். அந்த வகையில் படத்தை கொடுப்பதில் இவரை போல் தமிழ் சினிமாவில் யாரும் கிடையாது. ரசிகர்களுக்கு எந்த மாதிரி படங்களை கொடுத்தால் அவர்களுக்கு பிடிக்கும் என்பதை நன்கு அறிந்து படத்தை இயக்குவதில் வல்லவர் என்றே சொல்லலாம்.

Also read: மணிரத்தினம் செய்த கேவலமான செயல்.. கனவை தொலைத்து விரட்டியடிக்கப்பட்ட இயக்குனர்

இவர் தமிழ் சினிமாவை வேறொரு பரிமாணத்தில் பார்க்க கூடியவர். இவர் நாயகன், தளபதி போன்ற படங்களின் மூலம் உச்சகட்ட நட்சத்திரங்களுக்கு பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.அப்படிப்பட்ட இவருடைய படத்தில் எத்தனையோ பேர் நடிப்பதற்காக தவம் இருந்து காத்துக் கொண்டிருந்தார்கள். அதிலும் எப்படியாவது நடத்தி விட வேண்டும் என்று பல பேர் நடிக்கும் ஆசையில் சென்னைக்கு ஓடி வந்துள்ளார்கள்.

அப்படித்தான் மணிரத்தினம் கூப்பிட்டார் என்பதற்காக ஒருவர் தான் பார்த்துக் கொண்டிருந்த கவர்மெண்ட் வேலையை விட்டுவிட்டு நடிக்க வந்து விட்டார். அவர்தான் அலைபாயுதே படத்தில் மாதவனுக்கு அப்பாவாக நடித்தவர் பிரமிட் நடராஜன். இவர் இதற்கு முன்னர் இரண்டு படங்களில் நடித்திருந்தாலும் அலைபாயுதே படம் தான் இவருக்கு சினிமா கேரியரை உயர்த்தி கொடுத்தது.

Also read: ஒரே கதையை டார்கெட் செய்த மணிரத்தினம், வெற்றிமாறன், பாலா.. தர முடியாது என அடம்பிடித்த பிரபலம்

அலைபாயுதே படம் இவருக்கு மட்டுமல்ல இந்த படத்தில் வரும் எல்லா கதாபாத்திரத்திற்கும் ஒரு திருப்புமுனையாக தான் அமைந்தது. ஆனால் பிரமிட் நடராஜன் இந்தப் படத்தின் மூலம் தான் பரிச்சயமானார் என்றே சொல்லலாம். இதனைத் தொடர்ந்து அவர் அடுத்த படமான பிரெண்ட்ஸ் மற்றும் சமுத்திரம் படம் இவரை ஒரு நடிகராக தமிழ் சினிமாவிற்கு அடையாளம் காணச் செய்தது.

அப்படிப்பட்ட இவர் நடிப்பதற்காக கவர்மெண்ட் வேலையை விட்டுட்டு வந்திருந்தாலும் அதற்கான பலனை அடைந்து விட்டார். இவர் நடிப்பில் ஜெயித்ததால் அவர் பார்த்த கவர்மெண்ட் வேலை அவருக்கு ஒரு பெரிய விஷயமாக தெரியவில்லை.

Also read: சினிமாவே வெறுத்து ஒதுக்கிய நடிகர்.. மணிரத்தினம் அசிஸ்டன்ட்க்கு ஏற்பட்ட அவல நிலை

Trending News