கெட்ட நேரத்தால் முடங்கி போன சினிமா கேரியர்.. அருண் விஜய் போல் கம்பேக் கொடுக்க காத்திருக்கும் மாஸ் ஹீரோ

சினிமாவைப் பொறுத்தவரையில் நடிப்பு திறமை இருந்தாலும் அதிர்ஷ்டமும் முக்கியம். நல்ல இயக்குனர் மற்றும் கதை போன்றவற்றை தேர்ந்தெடுப்பதில் சிலர் செதப்பி விடுகிறார்கள். அதுமட்டும்இன்றி சினிமாவில் எப்போது திறப்புமுனை நடிகருக்கு வரும் என்பதை யாராலும் சொல்லிவிட முடியாது.

சினிமாவில் அடி நிலையில் இருந்த பலர் முன்னுக்கு வந்துள்ளனர். அந்த வகையில் சிவகார்த்திகேயன், சந்தானம், சூரி போன்ற பிரபலங்கள் கூட சினிமாவில் ஜொலித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி
அப்படி தான் சமீபத்தில் கூட பிரதீப் ரங்கநாதன், கவின் போன்ற பிரபலங்கள் மிகப்பெரிய ஹிட் கொடுத்து சினிமாவில் நல்ல நிலையில் உள்ளனர்.

Also Readசூர்யாவை ஓரம் கட்ட வரும் அருண் விஜய்.. கடைசி 5 படத்தில் வாங்கிய சம்பளத்தை கேட்டா தலை சுத்துது

ஆனால் பிரபல நடிகர் பிரசாந்த் சினிமாவில் உச்சத்தில் வலம் வந்து கொண்டிருந்தபோது அவருடைய கெட்ட நேரத்தினால் பீல்ட் அவுட் ஆகிவிட்டார். இப்போது மீண்டும் சரியான கம்பேக் கொடுக்க காத்திருக்கிறார். இவரை போல தான் நடிகர் அருண் விஜய்யும் ஹீரோவாக சில படங்களில் நடித்து வந்த நிலையில் தொடர் பிளாப் படங்களால் உடைந்து போனார்.

அதன் பிறகு அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் விக்டர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இந்த படம் இவருக்கு சரியாக அமைந்ததால் தொடர்ந்து பட வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது. இப்போது பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.

Also Read : அருண் விஜய் முதல் படத்தை இயக்கிய 2 இயக்குனர்கள்.. பாதி படத்தை முடித்து டீலில் விட்ட பரிதாபம்

அருண் விஜய்யை போல் மாஸ் கம்பேக் கிடைக்குமா என்று காத்துக் கொண்டிருப்பவர் நடிகர் பிரசாந்த். விஜய், அஜித் போன்ற நடிகர்களை பின்னுக்கு தள்ளி முன்னணி இடத்தில் பிரசாந்த் இருந்தார். ஆனால் அவரது திருமண வாழ்க்கையால் சினிமாவில் கவனம் செலுத்த முடியாமல் போய்விட்டது.

அதன் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு சில படங்களில் நடித்தாலும் அதுவும் தோல்வியை தழுவியது. இப்போது அந்தகன் படத்தை பிரசாந்த் பெரிதும் நம்பி உள்ளார். இப்படம் கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக வெளிவராமல் இருக்கிறது. இந்த படம் மட்டும் பிரசாந்துக்கு வொர்க் அவுட் ஆனால் மீண்டும் பழைய இடத்தை பிடிக்க வாய்ப்பு இருக்கிறது.

Also Read : நடிக்காமலேயே 5 தலைமுறைக்கு சேர்த்து வைத்த பிரசாந்த்.. வியக்க வைக்கும் சொத்து விவரம்