ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

சூர்யாவால் முடியாத விஷயத்தை சாதித்து காட்டிய பிரபல நடிகர்.. பதட்டத்தில் இருக்கும் ரசிகர்கள்

Actor Surya: வல்லவனுக்கும் வல்லவன் ஒருத்தன் இருப்பான் என சொல்வார்கள். அது சூர்யாவின் கதையில் இப்போது சரியாகி விட்டது. ஒரு படத்திற்காக அதிக கடின உழைப்பை போடும் முக்கியமான ஒரு சில நடிகர்களில் சூர்யாவும் ஒருத்தர். உடல் எடையை ஏற்றுவது இறக்குவது, தோற்றத்தை மாற்றுவது என எல்லா ரிஸ்கையும் அசால்ட்டாக செய்யக்கூடியவர். அப்படிப்பட்ட சூர்யா செய்ய முடியாத விஷயத்தை பிரபல நடிகர் ஒருவர் செய்து முடித்து இப்போது தமிழ் சினிமா ரசிகர்களை வாயை பிளக்க வைத்திருக்கிறார்.

சிங்கம், அயன், வேல் போன்ற படங்களில் தொடர்ந்து ஹிட் கொடுத்து சூர்யா முன்னணி ஹீரோக்களின் வரிசையில் நிலையான இடத்தை பிடித்தார். ஆனால் அவரை இந்திய சினிமா அரங்கே வெளிச்சம் போட்டு காட்டிய படங்கள் ஜெய் பீம், சூரரை போற்று போன்றவை தான் இந்த படங்கள் ரிலீசான சமயத்தில் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு சூர்யா மீது ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு விட்டது.

ரசிகர்கள் அதிக நம்பிக்கை வைக்கும் பொழுது அந்த நடிகர்களுக்கு அடுத்தடுத்து கதையை தேர்ந்தெடுப்பதில் முக்கிய பொறுப்பு வந்துவிடும். தொடர் வெற்றியை பார்த்துக் கொண்டிருந்த சூர்யா அடுத்து அவருடைய ஆஸ்தான இயக்குனரான பாலாவுடன் இணைய போவதாக அறிவித்திருந்தார். நந்தா, பிதாமகன் போன்ற படங்களின் மூலம் சூர்யாவுக்கு தமிழ் சினிமாவில் அடையாளத்தை வாங்கி கொடுத்த பாலாவுடன் சூர்யா மீண்டும் இணைவது அவருடைய ரசிகர்களுக்கு பெரிய சந்தோஷத்தை கொடுத்தது.

Also Read:ஆந்திராவின் மணிரத்தினத்துக்காக காத்துக் கிடக்கும் விஜய், சூர்யா.. போட்ட முதல்-ஐ காப்பாற்றி கொடுக்கும் இயக்குனர்

பாலா மற்றும் சூரியா கூட்டணியில் வணங்கான் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே சூர்யா சென்னை திரும்பி விட்டார். அதைத்தொடர்ந்து டீசன்டாக இரண்டு பேருமே படத்தில் இருந்து சூர்யா விலகியதை அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டார்கள். இதை தொடர்ந்து அருண் விஜய் இந்த படத்தில் நடிப்பதற்கு ஒத்துக் கொண்டார். சூர்யாவாலையே பாலாவை அட்ஜஸ்ட் பண்ணிக்க முடியவில்லை, அருண் விஜய் எத்தனை நாள் தாங்குவார் என பார்க்கலாம் என அப்போது ஒரு பேச்சு இருந்தது.

வல்லவனுக்கும் வல்லவன் ஒருத்தன் இருப்பான்

ஆனால் அருண் விஜய் எப்படியோ பாலாவுடன் வேலை செய்து படத்தை முடித்து விட்டார். ஏற்கனவே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பெரிய எதிர்பார்ப்பை கிளப்பிய நிலையில், அடுத்து வணங்கான் படத்தின் டீசர் வரும் 19ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. அருண் விஜய் எப்படி பாலாவுடன் ஒத்துப் போனார் என்ற கேள்விக்கு பெரிய பதிலே வெற்றி பெற்றவர்களுக்கும், ஒரு சின்ன வெற்றிக்காக ஏங்கிக் கொண்டிருப்பவர்களுக்குமான வித்தியாசம் தான்.

சூர்யா வணங்கான் படத்திலிருந்து விலகிய போது கண்டிப்பாக பாலாவின் தப்பாகத் தான் இது இருக்கும் என பரவலாக பேசப்பட்டது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதில் இருந்தே அந்த நெகட்டிவ் விமர்சனம் கொஞ்சம் குறைய தொடங்கியது. அடுத்து ட்ரெய்லர் வெளியாகி பாசிட்டிவாக இருந்தால் கண்டிப்பாக இந்த படம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடப்படும். ஒரு வேளை சூர்யா தான் தவறான முடிவு எடுத்து விட்டாரோ என பேசவும் வாய்ப்பு இருப்பதால், இப்போது ரசிகர்களுக்கு கொஞ்சம் பதட்டமாக தான் இருக்கிறது.

Also Read:மொத்தமாக பாலிவுட் பக்கம் சாய்ந்த சூர்யா.. ஹிந்தி சூரரைப் போற்று படத்தில் செஞ்ச சம்பவம்

Trending News