திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பவுன்சர்கள் கலாச்சாரத்தை முதலில் அறிமுகப்படுத்திய நடிகர்.. அட்லீ, அனிருத் வரை பண்ணும் அழிச்சாட்டியம்

Atlee – Anirudh: சினிமாவில் இப்போது பவுன்சர்கள் கலாச்சாரம் என்பது தலைவிரித்து ஆடுகிறது. ஒவ்வொரு தயாரிப்பாளர்களும் இந்த பவுன்சர்கள் கலாச்சாரத்தால் வயிற்று எரிச்சலில் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். நடிகர் நடிகைகளுக்கு சம்பளம் கொடுப்பதோடு அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் பவுன்சர்களுக்கும் சம்பளம் கொடுப்பது தயாரிப்பாளர்களின் தலையில் விழுந்தது தான். சமீப காலமாக இந்த பவுன்சர்களின் சம்பளமும் அதிகமாகி விட்டது.

நடிகர்கள் மற்றும் நடிகைகள் அவர்களுக்கு பாதுகாப்பாக வைத்திருக்கும் பவுன்சர்களுக்கு அவர்களுடைய சம்பளத்திலிருந்து தான் ஒதுக்க வேண்டும் என சமீபத்தில் தயாரிப்பாளர்கள் சங்கம் கூட முடிவெடுத்தது ஆனால் பெரிய ஹீரோக்கள் ஹீரோயின்களை புக் செய்யும் சமயத்தில் இது போன்ற விஷயத்தை ஃபாலோ செய்ய முடியவில்லை அவர்களுக்கு தேவையானதை எல்லாம் செய்து கொடுத்தால் தான் ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆக்கப்பட முடிகிறது.

அன்றைய காலகட்டத்தில் அவுட்டோர் ஷூட்டிங் போனால் அங்கு இருக்கும் வீடுகளிலேயே தங்கிக் கொண்டது உண்டு எனக் கூட நிறைய நடிகைகள் தங்களுடைய பேட்டிகளில் சொல்லி இருக்கிறார்கள். அதே போன்று பாடல் காட்சிகளுக்கு எல்லாம் காருக்குள்ளேயே துணிகளை மாற்றிக் கொண்டு நடிகைகள் ஷூட்டிங் பண்ணிக் கொடுத்ததும் உண்டு. ஆனால் இப்போது எல்லாமே தலைகீழாக மாறி இருக்கிறது.

Also Read:கேப்டன் 80% சதவீத படங்களில் விட்டுக் கொடுக்காத ஒரே நடிகர்.. யாருக்கும் தெரியாத விஜயகாந்தின் மறுபக்கம்

இதை வைத்துப் பார்க்கையில் இந்த பவுன்சர்கள் கலாச்சாரம் சமீபத்தில் தான் வந்ததா என கேட்டால், இல்லை அது 70களின் காலகட்டத்திலேயே இருந்தது. இந்த பவுன்சர்கள் கான்செப்ட்டை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியதே மக்கள் திலகம் எம்ஜிஆர் தான். எம்ஜிஆரை சுற்றி எப்போதுமே ஒரு ஐந்து பேர் இருப்பார்களாம். இந்த ஐந்து பேரை மீறி எம்ஜிஆர் இடம் ஒரு துரும்பு கூட போக முடியாது. அவர்களுக்கு எம்ஜிஆர் சொல்வது தான் வேதவாக்கு. இந்த குழுவுக்கு தலைவராக இருந்தவர் தான் ஆர் எம் வீரப்பன்.

பவுன்சர்கள் கலாச்சாரத்தை முதலில் அறிமுகப்படுத்திய நடிகர்

எம்ஜிஆர் அப்போதைய காலகட்டத்தில் தீவிர அரசியல் பணியிலும் இருந்தார். ஒருவேளை எதிரிகளால் தனக்கு எந்த ஆபத்தும் வந்து விடக்கூடாது என்று கூட இப்படி செய்திருப்பார். விஜயகாந்த் நடிக்கும் படப்பிடிப்பு இடங்களில் எல்லாம் அவர் ஒருவர் தான் மொத்த யூனிட்டுக்கும் பவுன்சர் என்று கூட சமீபத்தில் தயாரிப்பாளர் ஒருவர் பெருமையாக சொல்லி இருந்தார். அப்படிப்பட்ட பவுன்சர்கள் கலாச்சாரம் இப்போது இருக்கும் நடிகர்களிடையே ரொம்பவும் மோசமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நடிகை நயன்தாராவின் பவுன்சர்களுக்கு மட்டும் இரண்டு கோடி சம்பளம் கொடுக்கப்படுகிறது என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. போதாத குறைக்க அனிருத், அட்லி போன்றவர்கள் கூட தங்களுக்கு பவுன்சர்கள் வேண்டுமென தயாரிப்பாளர்களிடம் அடம் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். வர வர இந்த பவுன்சர்கள் கலாச்சாரம் தமிழ் சினிமாவில் பெரிய அழிச்சாட்டியமாக மாறி இருக்கிறது.

Also Read:நீ கருப்பா இருக்க.. பழிவாங்கவே வேறொரு கல்யாணம் செஞ்சுக்கிட்ட கேப்டனின் காதலி

Trending News