திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சத்தமே இல்லாமல் கருத்துக்கணிப்பில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்த ஹீரோ.. லயோலா காலேஜ் வெளியிட்ட ரிப்போர்ட்

Top 5 Ranking Heroes: தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக யார் நம்பர் ஒன், யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என பயங்கரமான போட்டோ போட்டி நடந்து வருகிறது. இதில் முன்னிலையில் இருப்பவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தளபதி விஜய் தான். மேலும் பாக்ஸ் ஆபிஸில் யாருடைய படம் அதிக வசூல் பெறுகிறதோ அவர்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என ஆளாளுக்கு பேசி இதை பூதாகரமாக ஆக்கியிருக்கிறார்கள்.

இந்நிலையில் சென்னை லயோலா கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் மக்களிடம் அவர்களுக்கு பிடித்த நடிகர்கள் யார் என கேட்டு கருத்து கணிப்பு நடத்தி இருக்கிறார்கள். அந்த கருத்துக்கணிப்பின் அடிப்படையில் தமிழ் சினிமாவின் முதல் ஐந்து இடத்தில் இருக்கும் நடிகர்களின் பெயர் தற்போது வெளியாகி இருக்கிறது. இதில் முதலிடத்தில் இருக்கும் நடிகர் எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்.

Also Read:வாய மூடிக்கிட்டு இருக்கணும், ஹூகும்!. நெல்சனுக்கு டைகர் முத்துவேல் பாண்டியன் போட்ட ஆர்டர்

தன்னுடைய சிறந்த நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவின் அடையாளமாக இருக்கும் நடிகர் சூர்யா, இந்தப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார். சூரரைப் போற்று, ஜெய் பீம் போன்ற படங்களின் மூலம் இவருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. மேலும் உலகநாயகன் கமலஹாசன் இந்த லிஸ்டில் நான்காவது இடத்தை பிடித்திருக்கிறார்.

சமீப காலமாக தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் கிங்மேக்கர் ஆக இருப்பவர் தளபதி விஜய். இவர்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என அவருடைய ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் அவரை புகழ்ந்து வருகிறார்கள். விஜய் தான் நம்பர் ஒன் என்ற மாயத் தோற்றம் சமூக வலைத்தளங்களின் மூலம் உருவாக்கப்பட்டு விட்டது. ஆனால் மக்களின் கருத்துக்கணிப்பின்படி விஜய் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.

Also Read:ஜெயிலர் பட மீதான நம்பிக்கையால் துணிந்து மோதும் சன் பிக்சர்ஸ்.. சொந்த ஊரில் ஆட்டம் போடா ரெடியாகும் ரஜினி

லயோலா கல்லூரி நடத்திய கருத்துக்கணிப்பின்படி மக்களுக்கு பிடித்தமான நடிகர்களின் லிஸ்டில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். கடந்த மூன்று தலைமுறைகளாக ஹீரோவாக மட்டுமே நடித்துக் கொண்டிருக்கும் இவர், இத்தனை வயது தாண்டியும் இளம் ஹீரோக்களுடன் போட்டியிட்டு இரண்டாவது இடத்தில் இருக்கிறார் என்பது மிகப்பெரிய விஷயம் தான்.

தமிழ் சினிமாவில் முதலிடம் என்பது விஜய்க்கா அல்லது சூப்பர் ஸ்டாருக்கா என்ற மிகப்பெரிய போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் சத்தமே இல்லாமல் லயோலா கல்லூரியின் கருத்துக்கணிப்பில் முதலிடத்தை பிடித்திருக்கிறார் நடிகர் அஜித்குமார். இவரைப் பற்றி சினிமாவில் எத்தனை நெகட்டிவ் விஷயங்கள் பேசப்பட்டாலும் அவருடைய ரசிகர்கள் அவரை தூக்கி வைத்து கொண்டாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

Also Read:ரஜினியை சந்தோஷப்படுத்த விஜய்யை அசிங்கப்படுத்திய தமன்னா.. இனி உங்களுக்கு வாய்ப்பு இல்ல அம்மணி

Trending News